News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரான தொல்.திருமாளவன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போன் செய்து நலம் விசாரித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொல்.திருமாவளவனுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வருகிற 30ம் தேதிவரை தொல்.திருமாவளவனை தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் யாரும் சந்திக்க முயற்சிக்க வேண்டாம் என்று கட்சியின் சார்பில் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அ.தி.மு.க.வுடனான கூட்டணியில் இருந்து பா.ஜ.க.வை வீசியெறிந்த எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனுக்கு எடப்பாடி பழனிசாமி போன் செய்து நலம் விசாரித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த அடுத்த கட்ட நகர்வாக இருக்குமோ என்றும், தி.மு.க. கூட்டணியில் தொல். திருமாவளவன் தொடர்வாரா என்றும் அரசியல் விமர்சகர்கள் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link