News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இன்று நீதிமன்றத்தில் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு மற்றும் விஜய் வெற்றிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய வழக்கு ஆகியவற்றில் தீர்ப்பு வந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, திருச்சி கிழக்கு மற்றும் கரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் தாக்கல் செய்த பொது நலமனுவின் விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியது.

சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று வழங்கியுள்ள தீர்ப்பில் அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், திருச்சி கிழக்கு, கரூர் மற்றும் விராலிமலை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை நீடிக்கிறது.

அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய தொகுதிகளில் அந்தந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, வழக்கு தொடர்ந்தவர்கள் வாபஸ் பெற்றுவிட்டனர். எனவே,  அங்கு இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம், திருச்சி கிழக்கு, கரூர் மற்றும் விராலிமலை ஆகிய தொகுதிகளில் தற்போது வரை அந்தந்த தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிரான வழக்குகள் தற்போது வரை நிலுவையில் இருப்பதால் அங்கு இடைத்தேர்தல் தடை நீடிப்பதாக தெரிவித்துள்ளது. 

அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறைக்கு  இடைத்தேர்தல் நடத்த அனுமதி வழங்கியிருப்பதால், ஜனவரியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். இரண்டு தொகுதிக்குத் தேர்தல் என்பது விஜய்க்கு ஒரு நல்ல வாய்ப்பு. இரண்டு தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தி மீண்டும் இரண்டு தொகுதியையும் தவெகவுக்குக் கொண்டுவரலாம்.

அதேபோல், இன்று பெரம்பூர் தொகுதி வாக்காளர் எஸ்.தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தேர்தல் வழக்கை தொடர்ந்தனர்.  அதில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ள முதல்வர் விஜய் தமது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அசையா சொத்துகள் தொடர்பான விவரங்களை முழுமையாகத் தெரிவிக்கவில்லை; சில சொத்துகள் தொடர்பாகத் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார் என்று குற்றச்சாட்டை முன்வைத்து வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதரமாற்றவை. என்பதால் தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று தனது வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.   இந்த வழக்கில் பெரம்பூர் தொகுதி தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய முதல்வர் விஜய்யின் மனு  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link