News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா இல்லையா என்ற சர்ச்சை தமிழகம் முழுக்க பரபரப்பு ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் சந்திப்பு நடந்துள்ளது.

அதேநேரம், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வெள்ளிக்கிழமை வந்த தீர்ப்புக்கு சனிக்கிழமை இரவு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனால்,  மறுசீராய்வு மனு இன்று நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணை இல்லை.  நாளை குரு நானக் ஜெயந்தி முன்னிட்டு உச்சநீதிமன்றம் விடுமுறை என்பதால் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்கிறார்கள்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபமேற்ற ஆணையிட்ட நிலையில் மதநல்லிணக்க கூட்டமைப்பு பேரணி மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்க இருந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதேபோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பிலான போராட்டத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மாநகர காவல்துறை தடையை மீறி பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டால் போராட்டக்காரர்களை கைது செய்ய திட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரையில் இன்று திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆகியோர் கைது செய்யப்பட வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.

நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு கேட்பது அரசின் உரிமை; ஆனால் மறுஆய்வு மனு தாக்கல் செய்ததாலேயே அமலில் உள்ள இடைக்கால உத்தரவு தானாக நிற்காது என்பதுதான் உண்மை.

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விப்புல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று உட்காரவில்லை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக எந்த விதமான மென்சனிங்கும் செய்யப்படவில்லை. எனவே, தடை உத்தரவு வாங்குவதற்கு வழியில்லை என்பதை வலியுறுத்தி தீபம் ஏற்றப்படும் என்பதே இப்போதைய நிலையாக உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link