News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே மாணவர்களுக்கு கல்வி விருது கொடுத்து ஊக்கப்படுத்தும் பணியை முதல்வர் விஜய் செய்துவருகிறார். கடந்த 4ம் தேதி கடந்த ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா முதல் கட்டமாக நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழாவுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராகுல்காந்தி கலந்துகொள்வாரா என்பதுதான் இப்போது பரபரப்பாகியுள்ளது.

தவெக சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ– மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை விஜய் வழங்கி வருகிறார். கடந்த 4-ம் தேதி சென்னையில் நடைபெற்ற முதற்கட்ட விழாவில் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதல்வர் விஜய் விருதுகளை வழங்கினார்.

இரண்டாம் கட்ட விழா நவ.18-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களுக்காக தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விழா நவம்பர் 26 மற்றும் 27-ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, சென்னை நீலாங்கரையில் பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கும் விழாவில், முதல்வர் விஜய் பங்கேற்று 36 தொகுதிகளின் மாணவர்களுக்கு விருதுகளையும் ஊக்கத் தொகையையும் வழங்கவுள்ளார்.

இதில் நவம்பர் 26-ம் தேதி கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதி மாணவர்களுக்கும் நவம்பர் 27-ம் தேதி சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதி மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

விழாவில் கலந்துகொள்ளும்  மாணவர்களுக்கான தனி அடையாள அட்டைகள் மற்றும் பெற்றோருக்கான அனுமதிச் சீட்டுகளை வழங்கியுள்ளதாகவும், இவை மாவட்ட நிர்வாகிகள் மூலம் உரியவர்களிடம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் சோனியா காந்தி புத்தக விழாவில் முதல்வர் விஜய் கலந்துகொண்டபோது, ராகுல் காந்திக்கு கல்வி விருது விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியானது. எனவே, அவர் வருவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் தவெக முக்கியப் புள்ளிகள், ‘கல்வி விருது விழாவை அரசியல் மேடையாக மாற்றுவதற்கு விஜய் ஒருபோதும் விரும்ப மாட்டார். ஆகவே, ராகுலுக்கு அழைப்பு இருக்காது’’ என்கிறார்.

பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link