Share via:
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து அதிமுகவில்
இருந்து நிறைய பேர் தவெகவில் இணைந்துவருகிறார்கள். அந்த வகையில் இன்று தூத்துக்குடி
அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகள் பொன்னரசி
சண்முகநாதன் மற்றும் அவரது கணவர் அசோக் ஆகியோர் அமைச்சர் ஸ்ரீநாத் முன்னிலையில் தவெக-வில்
இணைந்தனர்.
இந்த நிலையில் அதிமுகவினரை கட்சியில் இணைத்தது போதும், திமுகவினரை கூட்டி வாருங்கள் என்று விஜய் உத்தரவு போட்டிருக்கிறாராம்.
இதற்கு காரணம் சமீபத்தில், ‘த.வெ.க ஆட்சி கவிழும்’ என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
பேசியதுதான்.
அமைச்சர் கே.என் நேரு இல்லத் திருமண விழாவில் பேசிய தி.மு.க தலைவர்
ஸ்டாலின், த.வெ.க ஆட்சி கவிழ்ந்து தி.மு.க ஆட்சி விரைவில் அமையும் எனப் பேசியிருக்கிறார்.
இது முதல்வர் தரப்புக்கு கடும் டென்ஷனை கொடுத்திருக்கிறதாம். அதனாலே ரூட்டை மாற்றுங்கள்
என்று கூறியிருக்கிறார்.
திமுகவினர் பலரும் தவெகவில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்த நேரத்தில்,
தீயசக்தி கட்சியில் இருந்து யாரையும் சேர்க்கவேண்டாம் என்று விஜய் கூறிவிட்டார். ஆனால்,
ஆட்சி கலையப்போகிறது என்று பேசுவதை சகித்துக்கொள்ள முடியாத நிலைக்குப் போய்விட்டார்.
அதனால், திமுகவில் இருந்து தவெக வருவதற்கு துடித்த தென்மாவட்ட
மாஜி அண்ணாச்சி ஒருவரை அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் கட்சி மாறுவதற்கு
மிகவும் ஆர்வமாக இருந்த மாஜி, இப்போது தவெக போகும் திசையைப் பார்த்து ஜெர்க் ஆகியிருக்கிறாராம்.
மாவட்டச் செயலாளர் பதவியுடன் ஏதாவது அரசு பொறுப்பு கொடுத்தால்
வரலாம் என்று கூறியிருக்கிறார். இவருக்கு மட்டும் கட்சி மாறி வந்தவுடன் பொறுப்பும்,
பதவியும் கொடுத்தால் சரியாக இருக்குமா என்று விஜய் யோசிக்கிறாராம். விஜய் உத்தரவுக்குக்
காத்திருக்கிறார் தெற்கு அண்ணாச்சி.

