News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் (e-CSR) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்குச் செல்லாமல் ஆன்லைனில் புகார் அளிக்கலாம் என்றும் அதற்கு இ.சி.எஸ்.ஆர். வழங்கப்படும் என்று சென்னை காவல்துறை தலைமை இயக்குநரும், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் தலைமைப் பொறுப்பு அதிகாரியுமான டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அறிவித்துள்ளார்.

மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் டிஜிபி முன்னிலையில் இந்தப் புதிய வசதியை திறந்துவைத்த டிஜிபி மகேஷ் குமார், ‘’இனி, பொதுமக்கள் தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.police.tn.gov.in என்ற முகவரியில் தங்களது புகார்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம். புகார் பதிவு செய்யப்பட்டவுடன் அதற்கான e-CSR ஒப்புதல் ரசீதும் வழங்கப்படும்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கான காவல்துறை சேவைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. e-CSR வசதி மூலம் புகார் அளிப்பவர்களுக்கு உரிய ஒப்புதல் ரசீது கிடைப்பது உறுதி செய்யப்படும். கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால், மூன்று நாள்களுக்குள் புகார்தாரர்களைத் தொடர்புகொண்டு, தேவைக்கேற்ப விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைப்பார்கள்.

ஆன்லைனில் பெறப்படும் புகார்களில் எத்தனை புகார்கள் முதல் தகவல் அறிக்கையாக மாற்றப்பட்டுள்ளன, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க முடியும்.

மேலும், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக ஆன்லைனில் புகார் அளிக்கும் வகையில் புதிய இணையதள வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.  

தூத்துக்குடி மற்றும் மதுரையில் அண்மையில் நடைபெற்ற காவல் நிலையச் சம்பவங்கள் குறித்து அவர் பேசுகையில், காவல் மரணங்கள் மற்றும் காவல் நிலையங்களில் நடைபெறும் அத்துமீறல்கள் தொடர்பாக காவல்துறை ஜீரோ டாலரன்ஸ் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.

சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகள் உள்ளன. வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், நீதித்துறை விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. விசாரணையில் தவறுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையங்களுக்கு வரும் புகார்தாரர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைவரின் நடமாட்டமும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது.

பொது இடங்களில் மது அருந்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோரைக் கண்டறிந்து தடுக்கும் வகையில் ட்ரோன் கண்காணிப்பு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாகப் பேசிய டிஜிபி, காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தேர்வில் சில சட்டரீதியான தடைகள் இருந்தன. தற்போது நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சி தொடங்கியுள்ளது.

விரைவில் 1,200 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த ஆறு மாதங்களில் காவல்துறைக்கு கூடுதலாக 34,000 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்.

காவலர்களுக்கு வார விடுமுறை வழங்குவதற்குப் போதிய ஆள்ன்பலம் தேவைப்படுகிறது. தற்போது அனைவருக்கும் வார விடுமுறை வழங்க முடியாத நிலை இருந்தாலும், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆறு மாதங்களில் முக்கியப் பண்டிகைகளின்போது அமைதியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒவ்வொரு மனித உயிரும் எங்களுக்கு முக்கியம். குற்றங்களைக் குறைப்பதே காவல்துறையின் முன்னுரிமை.

25 சதவீதம் அதிகமாக கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளோம். போதை பொருள் வழக்கில் 73 சதவீதம் குற்றவாளிகளை கூடுதலாக கைது செய்திருக்கிறோம்.
குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் சீல் வைக்கப்பட்ட விஷயத்தில் கடந்தாண்டுகளை விட 64 சதவீதம் அதிகமாக முடக்கி இருக்கிறோம். அந்த கணக்குகளில் இருக்கும் பணத்தையும் முடக்கி வைத்துள்ளோம். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் 234 சதவீதம் அதிகமாகும்.

தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை பயன்படுத்தியது தொடர்பான வழக்குகளில் கடந்த ஆண்டில் 204 வழக்குகளை பதிவு செய்திருக்கிறோம். ஆனால் இந்த ஆண்டு 497 வழக்குகளை பதிவு செய்திருக்கிறோம். அதாவது 1034 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டு மே 1ம் தேதி முதல் நவ.15ம் தேதி வரை 1 லட்சத்து 45 ஆயிரத்து 315 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 4 லட்சத்து 85 ஆயிரம் போதை மாத்திரைகளை கைப்பற்றி உள்ளோம். சதவீதம் அடிப்படையில் 234 சதவீதம் அதிகமாகும். குற்றம்சாட்டப்பட்டவர்களின் கைது நடவடிக்கைகளில் 94 சதவீதம் அதிகரித்துள்ளது.
எந்த புள்ளி விவரங்களை எடுத்து பார்த்தாலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முன்னேற்றம் இருக்கிறது. முக்கிய நிகழ்வுகளின் போது பாதுகாப்பு முறையாக வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக பராமரித்து வருகிறோம். கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் 74 சதவீதம் கூடுதலாக வழக்குகளை பதிவு செய்திருக்கிறோம்.
ஜனவரி முதல் நவம்பர் 15 வரை நடந்த கொலைகளில், கடந்த 5 ஆண்டுக்கான சராசரி எண்ணிக்கை – 1421 கொலைகள். இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 15 வரை 1306 கொலைகள் மட்டுமே நடந்துள்ளன’’’ என்று தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறார் டிஜிபி.

சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு என்று கூச்சலிடும் கும்பல் எங்கே போச்சு..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link