News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் குளறுபடி என்று நாளிதழ் செய்தி வெளியிட்டதன் அடிப்படையில் திமுகவினர் பொங்கியெழுந்து கண்டனம் தெரிவித்தனர்.

திமுகவினர் இதுகுறித்து, ‘’2026 தேர்தல் பிரச்சாரத்தின் போது, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும் என த.வெ.க வாக்குறுதி அளித்தது. ஆனால் இன்று, அந்த 2,500 ரூபாய் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதோடு மட்டுமல்லாமல், கடந்த மூன்று மாதங்களாக 1,000 உதவித்தொகை பெறும் பெண்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து குறைத்து, இத்திட்டத்தையே படிப்படியாக முடக்கும் முயற்சியில் தற்போதைய த.வெ.க அரசு ஈடுபட்டுள்ளது…’’ என்று மாஜி அமைச்சர்கள் வரிசையாக அறிக்கை விட்டனர்.

மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்ட பயனாளிகளில் சுமார் 50 சதவீதம் பேர் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் மக்களிடம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் உண்மை நிலை விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் சேர்க்கப்பட்ட தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் நிதியுதவி அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் மாதம் 15-ஆம் தேதி இத்தொகை வழங்கப்படுகிறது. நவம்பர் 2026 மாதத்திற்கான உரிமைத்தொகை *14.11.2026 அன்று மொத்தம் 1,29,97,568 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 17 இலட்சம் பயனாளிகளில் 50 சதவீதம் பேர் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானதாகும். இரண்டாம் கட்டப் பயனாளிகளைப் பெருமளவில் நீக்கும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கென எந்தவொரு சிறப்பு நீக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை’’ என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போது மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளில் யாரேனும் இறந்திருந்தாலோ, திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயன்பெறத் தகுதியற்றவர்களாக மாறியிருந்தாலோ அல்லது தாங்களாகவே திட்டத்திலிருந்து விலக விருப்பம் தெரிவித்திருந்தாலோ, அத்தகைய விவரங்களின் அடிப்படையில் பயனாளியின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் உரிய முறையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. எனவே, இது தொடர்பாக நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் எவ்விதமான உண்மையும் இல்லை என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இது, திமுக திட்டமிட்டு பரப்பிய பொய் செய்தி என்பது தெரிந்ததும் இப்போது மக்களின் கோபம் திமுக மீது பாய்ந்துள்ளது. நூலக ஊழலை மறைக்க என்னென்னவோ செய்கிறது திமுக. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link