News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த பிறகு பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்த, அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக மாணவர்களுக்கு வழங்கும் சாதாரண தரமற்ற சைக்கிள்களுக்குப் பதிலாக ஸ்டைலாக ஹெல்மட் மற்றும் தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதியுடன் கூடிய தரமான மற்றும் நவீன சைக்கிள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் கேக் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  அந்த வழியில் இப்போது பள்ளி மாணவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா காலணி, காலுறை, ஸ்வெட்டர் மற்றும் ரெயின் கோட் வழங்குவதற்கு 52 கோடி ரூபாய் மதிப்பில் 4 முக்கிய டெண்டர்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் மலைப்பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில், 2027-2028 கல்வி ஆண்டிற்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடை இணைப் பொருட்களுக்கு ஒரே நாளில் 4 டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

52 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்கள் மூலம் மாணவர்களுக்கான காலணி, காலுறை, கம்பளி ஸ்வெட்டர் மற்றும் ரெயின் கோட் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. 

முதல் டெண்டரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காலணி வழங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 37 கோடியே 24 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது டெண்டரில் மாணவர்களுக்கான விலையில்லா காலணிகளுடன் வழங்கப்படும் காலுறைக்கான டெண்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பு 9 கோடியே 7 லட்சம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மலைப் பகுதிகளில் பயிலும் மாணவர்கள் மழைக்காலத்தில் சிரமமின்றி பள்ளிக்கு வருவதற்காக பிரத்யேகமாக ரெயின்கோட் வழங்கப்படுகிறது. இதற்காக 3 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.  இதன் வாயிலாக மொத்தம்  91 ஆயிரத்து 771 ரெயின்கோட்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. செர்ரி சிவப்பு நிறத்திலான ரெயின் கோட்கள் மாணவர்களுக்காக 28, 30, 32 மற்றும் 34 இன்ச் அளவில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் கோவை, நீலகிரி, திண்டுக்கல் (கொடைக்கானல்), தர்மபுரி, ஈரோடு, சேலம் (ஏற்காடு), கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல் (கொல்லிமலை), தேனி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர் (வால்பாறை), திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மலைப் பகுதி பள்ளி மாணவர்களுக்கு பயன் கிடைக்கும்

நான்காவது டெண்டரில் குளிர் அதிகம் உள்ள மலைப் பகுதி மாணவர்களுக்கு கம்பளி ஸ்வெட்டர் வழங்கவும் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 2 கோடியே 42 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்குத் தேவையானவற்றை பார்த்துப்பார்த்துச் செய்கிறார் விஜய்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link