News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அக்குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணமாக 5.25 கோடி ரூபாய் வழங்குவதற்கு முதல்வர் விஜய் ஆணை பிறப்பித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீண்டகால வேதனையை உணர்ந்து, அவர்களுக்கான நீதியையும் நிவாரணத்தையும் உறுதி செய்வது உண்மையான மக்கள் நல ஆட்சி என மக்களிடமிருந்து பாராட்டு கிடைத்துவருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயம் அடைந்தனர். அப்போது அவர்களுக்கு தலா 25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 5 லட்சமும் நிவாரண நிதியாக ஏற்கனவே வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூடுதல் நிவாரணம் வழங்கிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் முறையிட்டனர். அதனைக் கனிவுடன் பரிசீலனை செய்து, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி,* தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி ஆணை பிறப்பித்துள்ளார்.

அதன்படி ஏற்கனவே வழங்கிய 25 லட்சத்துடன் கூடுதலாக 25 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும். காயமடைந்த 40 நபர்களுக்கு வழங்கவேண்டிய கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதற்கு  மொத்தம் 5.25 கோடி ரூபாய் கூடுதல் நிவாரண நிதியாக* வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இந்த உத்தரவு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கொடுத்துள்ளது. தமிழக மக்களிடம் மிகப்பெரும் பாராட்டும் மரியாதையும் கிடைத்துயுள்ளது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த குடும்பங்களுக்கு நீதியும் நிதியும் கிடைத்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link