Share via:
மகாபலிபுரம் இண்டர்காண்டினெண்டல் ரிசார்ட்டில் ஆளும் தவெக கட்சி
எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்றைய தினம் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை குறித்து ஆளுநரிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டிருக்கும் சூழலில்
இந்த மீட்டிங் அரசியல் முக்கியத்துவம் பெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ. ஒருவரிடம் பேசினோம்.
முகத்தை மறைத்துப் பேசினார். ‘’முதலில் காலையில் சந்திப்பு என்று சொல்லப்பட்டது. ஆனால்,
முதல் நாள் உளவுத்துறை ரிப்போர்ட் வரவில்லை. அதனால் நேற்று காலையில் டிஜிபி மகேஸ் குமார்
அகர்வால், உளவுத்துறை ஐ.ஜி அஸ்ரா கார்க்கை சந்தித்துப் பேசிவிட்டு, மாலை 4 மணியளவில்
எம்.எல்.ஏ.க்களை சந்தித்தார் முதல்வர் விஜய். உளவுத்துறை ரிப்போர்ட் கையில் வைத்துக்கொண்டே
இந்த மீட்டிங் நடத்தினார்.
சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியிருக்கும் துணை சபாநாயகர் ரவிசங்கர்,
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆகியோருக்கு எச்சரிக்கை விடப்படுமா அல்லது
நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற சலசலப்பு இருந்த நிலையில், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா முதலில்
பேசினார்கள். எதிர்க்கட்சி பற்றி எச்சரிக்கை கொடுத்தார்கள். அப்போது விஜய் முகத்தில்
எந்த எக்ஸ்பிரசனும் காட்டாமல் அமைதியாக இருந்தார் விஜய்.
இதையடுத்து ஒட்டுமொத்த சந்திப்பாக இல்லாமல் எம்.எல்.ஏ.க்களை பத்து
குழுவாகப் பிரித்து சந்தித்துப் பேசினார். முதலில் பெண் எம்.எல்.ஏ.க்களை சந்தித்துப்
பேசி அனைவருக்கும் தீபாவளி பரிசு கொடுத்தார். அவர்களுக்கு தனிப்பட்ட எந்த எச்சரிக்கையும்
வழங்கப்படவில்லை. இன்னும் ஆர்வத்துடன் உழைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவர்கள்
அனைவரும் சிரித்த முகத்துடன் வந்தபிறகே அத்தனை எம்.எல்.ஏ.க்களும் நிம்மதி பெருமூச்சு
விட்டனர்.
அடுத்து வந்த ஆண் எம்.எல்.ஏக்களிடம் இறுகிய முகத்துடனே பேசினார்.
‘’உங்களுக்குப் போதிய அரசியல் அனுபவம் இல்லாத காரணத்தால் பல்வேறு சிக்கல் வருகின்றன.
எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு மாட்டிவிட முயற்சிக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டுபிடித்து
சரியாக டீல் செய்வதற்குக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் சிக்கிக்கொள்ளும் பிரச்னைகளை
சரி செய்வதற்கு எனது டீம் நிறையவே வேலை செய்யவேண்டியிருக்கிறது. ஏந்த ஒரு விஷயத்திலும்
குழப்பம் இருந்தால், சந்தேகம் இருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள். பொதுவெளியில்
பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்.
டெல்லி விவகாரம், எதிர்க்கட்சி அறிக்கை குறித்தெல்லாம் நீங்கள்
பதில் சொல்ல வேண்டாம். எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். தொகுதியில் சுற்றிக்கொண்டே
இருங்கள். நமது ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது. இனி, எந்த தவறும் நிகழ்ந்துவிடாமல்
எச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள்’’ என்று பேசி அனுப்பினார்.
அதன்பிறகு துணை சபாநாயகர் ரவிசங்கர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ
அருள் விக்னேஷ் ஆகிய இருவரையும் தனித்தனியே சந்தித்துப் பேசினார். முதலில் அவர்களுடைய
விளக்கத்தைக் கேட்டிருக்கிறார். அதன்பிறகு அவர்களைப் பற்றிய உளவுத்துறை ரிப்போர்ட்டை
கையில் வைத்துக்கொண்டு சில கேள்விகள் கேட்டுள்ளார். உங்களால் நமது கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
இது லாஸ்ட் வார்னிங். இனியும் தவறு செய்யாதீர்கள்’ என்று பேசி அனுப்பிவிட்டார். அவர்களுக்கு
தீபாவளி பரிசு கொடுக்கப்படவில்லை.
நம்பிக்கையில்லா தீர்மானம் இப்போது இல்லை என்றாலும், ஏதேனும் ஒரு
காரணத்தால் விரைவில் எதிர்க்கட்சிகள் கொண்டுவர வாய்ப்பு உண்டு என்பதாலே மென்மையான அணுகுமுறை
கடைப்பிடித்துள்ளார். அடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதும் விஜய்யின்
உண்மையான ஆக்ஷனைப் பார்க்க முடியும்’’ என்று கூறினார்.
சரியான நேரத்தில் சரியான கூட்டம் நடத்தியிருக்கிறார் விஜய்.

