News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழ்நாடு முதலமைச்சர் .ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் நீர்நிலைகள் புனரமைப்பில் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, இணையவழியில் தடையின்மைச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக நீர்வளத் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள “ஏரி” இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்.

அதோடு, தமிழக நீர்நிலைகளுக்கு புத்துயிர் கொடுக்க சி.எஸ்.ஆர்.நிதி பயன்படுத்துவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் பெருமளவு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையை நம்பியே உள்ளது. பருவமழை பொய்த்தால் தண்ணீர் பற்றாக்குறை, நிலத்தடி நீர்மட்டம் குறைவு, விவசாயம், கிராமப்புற வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பருவமழை பொய்த்தால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, அரசின் முயற்சியுடன், தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதி, என்.ஜி.ஓ.,  கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் நிதி மற்றும் உழைப்பை ஒருங்கிணைத்து நீர்நிலைகளை புனரமைக்க, பாதுகாக்க  விஜய் அரசு முடிவு எடுத்துள்ளது.

இதன் மூலம் நீர்நிலைகளை அதன் பழைய கொள்ளளவுக்குக் கொண்டு வர முடியும். மேலும், நிலத்தடி நீர் செறிவூட்டல்  மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவதற்கு முடியும். அதிகப்படியான நீர் வெளியேறுவதையும், உடைப்புகளையும் தடுத்து வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவை எல்லாவற்றையும் விட அனைவருக்கும் தடங்கலின்றி குடிநீர் வழங்க முடியும். அதோடு விவசாயிகளுக்கு போதிய அளவு நீருக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

தனியார் சி.எஸ்.ஆர். நிதி ஆயிரக்கணக்கான கோடி தமிழக நீர்நிலைகளுக்கு வருவதால் ஏரி, குளம் தூர்வாரப்படுவது தொடர்ந்து நடைபெறும். கல்வி நிறுவனங்கள், என்.ஜி.ஓ.க்கள் மூலம் நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் செயல்படுவதால் எந்த ஊழலும் நடைபெற வாய்ப்பு இருக்காது. எனவே,  குடிநீர், விவசாயத்தைப் பாதுகாக்கும் தவெக் அரசின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.

நீர்நிலைப் பாதுகாப்புக்கும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை சதுப்பு நிலங்கள், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் தொடர்பான அனுமதி, ஆக்கிரமிப்பு நடவடிக்கை போன்றவற்றில் மாவட்ட ஆட்சியர் முடிவு எடுத்து வந்தார். இனி அந்த அதிகாரம் மாநில அளவிலான இயக்குனருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளுக்கு ஒரே மாதிரியான, கடுமையான பாதுகாப்பு வழங்கவும், உள்ளூர் அளவில் ஏற்படும் அழுத்தங்களை தவிர்க்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link