News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மது விற்பனை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எராளமான நபர்கள் குடிகாரர்களாக மாறுகிறார்கள். இந்த நிலையில், தீபாவளிக்கு மது விற்பனை குறைந்திருப்பது ஒரு நல்ல செய்தி.

கடந்த தீபாவளிக்கு 790 கோடி ரூபாய்க்கு மது விற்பனையான நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு கடந்த 2 நாளில் வெறும் 441.38 கோடி ரூபாய் மட்டுமே விற்பனை நடந்துள்ளது.

இதற்கு டாஸ்மாக்கில் நடந்த அதிரடி மாற்றங்கள் மட்டுமே காரணம். இதனால் கிட்டத்தட்ட ரூ.348 கோடி குறைவாக வசூலாகியுள்ளது.  அதோடு ஊழியர்கள் வேலைநிறுத்தம்.  தவெக அரசு பாட்டில் திரும்ப பெறும் திட்டத்துக்கு 10 ரூபாய்  கட்டாயம் என்று அறிவித்தது.

இதை எதிர்த்து சுமார் 600 கடைகளை ஊழியர்கள் மூடினார்கள்! தீபாவளிக்கு முன் ஞாயிறு அன்று பல கடைகள் திறக்கவில்லை. அதோடு  புயல் மழை சேர்ந்துகொண்டது. அதனால், விற்பனைச் சரிந்துல்ளது. இந்த ஆண்டு  திருச்சி மண்டலம் மட்டும் 98.97 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்து முதலிடம் பிடித்துள்ளது.

மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்ற வகையில் இது நல்ல விஷயம். குடிகாரர்கள் குறைவாகக் குடிப்பது அவர்கள் குடும்பத்துக்கும் உடல்நலத்துக்கும் நல்லது.  இந்த சரிவு அரசின் கஜானாவை பாதிக்கும் என்றாலும் மக்கள் நலனே விஜய் அரசுக்கு முக்கியம்.

கொஞ்சம் கொஞ்சமாக மதுவிற்பனை குறைந்து, மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link