News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், தீபாவளியையொட்டி 10 வகையான காய்கள் அடங்கிய வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டத்தை சென்னையில் அமைச்சர் காந்திராஜ் தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் வருகிற சனிக்கிழமை வரை இந்த தொகுப்பு வழங்கப்படுகிறது. சென்னையில் 4 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் காய்கறி தொகுப்பில் அரை கிலோ வெங்காயம் அரை கிலோ தக்காளி, கால் கிலோ கத்திரிக்காய், கால் கிலோ உருளைக் கிழங்கு மற்றும் 200 கிராம் கேரட், 200 கிராம் பீன்ஸ், 100 கிராம் பச்சை மிளகாய், 100 கிராம் எலுமிச்சை, 50 கிராம் இஞ்சி மற்றும் ஒரு தேங்காய் இடம்பெற்றிருக்கும்.

 

இந்த 218 கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள். ஆதார் அட்டையுடன் செல்பவர்களுக்கு இந்த வெற்றி காய்கறி காம்போ கிடைக்கும்.

இந்த வெற்றி காம்போ பேக் நேரடியா விவசாயிகள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலமா (தருமபுரி, கடலூர், தஞ்சாவூர், ஒட்டன்சத்திரம்) வாங்கி, கூட்டுறவு பண்டகசாலையில் விற்பனை செய்வதால் விலைவாசி குறையும்.

இதன் மூலம் ஏழை, நடுத்தர மக்கள்: தினக்கூலி, ஆட்டோ டிரைவர், அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு மாதம் காய்கறி செலவு கடுமையாகக் குறையும். இதன் மூலம் விவசாயிக்கு நேரடியா நல்ல விலை கிடைக்கும்.

வெளி மார்க்கெட்டில் விலை ஏற்றினால் கூட, அரசு கடையில் குறைந்த விலையில் இருப்பதால் தனியார் கடைக்காரர்கள் விலையை ஏற்ற முடியாது. இது தான் விலைவாசியை கட்டுப்படுத்தும் மறைமுக பிரேக். விஜய் ஆட்சியின் முக்கிய சாதனை என்றே சொல்லலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link