News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

’அங்கிள் விஜய் அவர்களே… பயம் என்பது திமுக அகராதிலயே கிடையாது’ என்று நேற்று கோவை விழாவில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்..

மேலும் அவர் பேசுகையில், ‘’விஜய்யை டம்மியாகிட்டு அவர் பின்னாடி இருக்கக்கூடிய கார்ப்பரேட் பவர் சென்டர்கள் தான் இந்த ஆட்சி ஆட்டிப் படைக்கிறாங்க. விஜய்யை வைத்து பவர் சென்டர்கள் வித்தை காட்டுற சர்க்கஸ்தான் இந்த தவெக ஆட்சி.

பெரியார் அறிவுலகம் அமைத்ததற்குத் தாய்க் கழகம் வழங்கிய பாராட்டை ஊக்கமாகத் தலைவணங்கி ஏற்கிறேன். தந்தை பெரியாரும் – பெரியாரின் பெருந்தொண்டர்களும் பாடுபட்டு உருவாக்கிய அறிவுலகமான தமிழ்நாட்டில், அவதூறுகள் – பொய்கள் – போலி வீடியோக்கள் என ஆளும்கட்சி செய்து கொண்டிருப்பது ஹெல்த்தி பாலிடிக்ஸ் அல்ல ஃபில்த்தி பாலிடிக்ஸ்’ என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதற்கு தவெக ஐ.டி.விங் இன்று அதிகாரபூர்வமாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், ‘’தன்னை யாரும் பாராட்டவில்லையெனத் தனக்குத் தானே பாராட்டு விழா நடத்திக்கொண்ட Senior Generational Abuser-ஏ!

Insecurity-யின் உச்சத்தில் உழலும் டம்மி டாடிக்கு, பெரியார் அறிவுலகத்தில் பெரியார் சிலை எப்படியிருக்க வேண்டும் என்று கூறத் தெரிந்து என்ன பயன்? அறிவாலயத்தில் பெரியார் சிலை வைக்கத் துப்பில்லையே. ஒருவேளை சிலை வைத்தால், திமுக எனும் அறிவிலிக் கூட்டத்தைப் பெரியாரின் தடி தாக்கும் என்ற அச்சமா? இல்லை, மஞ்சள் துண்டு போடச் சொன்ன திமுகவின் ஆஸ்தான ஜோசியர் அறிவாலயத்தில் பெரியார் சிலை வைக்கக் கூடாது என்று கூறியதாலா?

வெளியே நாத்திகவாதி வேடமிடும் Senior Generational Abuser-ஏ! திமுகவின் ஆஸ்தான ஜோசியரின் அறிவுறுத்தலின்படிதான் தங்களின் கட்சி விழாக்களுக்கு நல்ல நேரம் பார்த்துப் பந்தக்கால் நடப்படுகிறது, நீங்கள் வெல்ல வேண்டுமென்று திருச்செந்தூரில் யாகம் நடத்தப்பட்டது, ஒட்டகங்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது, திமுகவினரின் இல்லத் திருமணங்கள் வேத மந்திரங்கள் ஓதி நடைபெறுகின்றன, Harry Potter Stick-ஓடு Walking செல்வது, கொளத்தூரில் பெண்களை ஆடவிட்டு ஆணவத்தில் ஆடியதால் தான் கொத்து பரோட்டாப் போட்டு வீட்டில் உட்கார வைத்திருக்கிறார்கள் அரைவேக்காடு Uncle.

 “ஸ்டாலின் தான் வந்தாரு, நீச்சலடிக்கவுட்டாரு” என்று மக்கள் சொன்னபோதும், ஆபாசத்தையும் அவதூறையும் DNA-வாகக் கொண்ட Generational Abusers-ஆல் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பின்றித் தவித்தபோதும், போதைப்பொருள் புழக்கத்தைப் பரவவிட்டு தமிழக இளைஞர்கள் சீரழிந்தபோதும், Shooting நடத்தி, Insta Influencers-ஐ “பெரும் பெரும் பருந்து” என Reels போட வைத்து, அவர்களோடு Reels எடுத்து Share செய்து, அப்பாத் திணிப்பு செய்த Dummy Daddy அவர்களே! திமுக ஆட்சியில் இருந்ததைப் போல் தவெக அரசில் ஊழலும் லஞ்சமும் இல்லை என்று மக்கள் மகிழ்ச்சியோடு பகிரும் பதிவுகளையும் காணொளிகளையும், Social Media-வில் Active-ஆக இருக்கும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்பது, திமுக ஊழல் செய்யாத உத்தமக் கட்சியென்று நீங்கள் சொல்லாததிலேயே உறுதியாகிறது.

 Poster-ல் செருப்பை எறிந்ததற்காகப் பாட்டியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்த பண்ணையாரே! மக்கள் போராடியபோது திரைப்படம் பார்த்து Review எழுதிய Dummy Daddy-ஏ! 24/7, ஏன் தூக்கத்திலும்கூட எங்கள் வெற்றித் தலைவர் விஜய் அவர்களின் நினைவுகளைச் சுமந்து தனியுலகத்தில் உழன்று கதறும் அரைவேக்காடு Uncle! நன்றாக உண்டு, உறங்கி, ஆரோக்கியமாகி ஓய்வெடுங்கள்.

கட்டுமரக்கதை கட்டி அரசியல் பிழைக்கலாம் என்பதற்கு இது கட்டுமரக்காலமல்ல, கட்டுமரத்தின் வழித்தோன்றலே! சட்டமன்றத்தில் பெண் ஆளுமையின் உடையை உருவுவது, மேடைகளில் பெண்களைக் குறித்து எப்போதும் ஆபாசமாகப் பேசுவது, எதிர்க்கும் நபர்களைத் தனிமனிதத் தாக்குதலுக்கு உள்ளாக்குவது என்று திமுகவின் வரலாறுகளையே Content-களாகக் கொண்ட Filthy Politics என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் புதிய Web Series-ஐ உங்கள் Watchlist-இல் Add செய்துகொள்ளுங்கள், அரைவேக்காடு Uncle! ஒரு முன்னாள் முதலமைச்சர் stand up comedian-ஆக உருமாறினார் என்று அரசியல் வரலாற்றில் நீங்காது நிலைத்திருக்கும் Sweet Uncle’’ என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link