News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

உச்ச நீதிமன்ற்த்தில் கே.என்.நேருவின் மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம், போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்க நினைத்த அன்பில் மகேஷ் வகையாக மாட்டியிருக்கிறார்.

திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.634 கோடி பணி நியமன ஊழல் வழக்கில் தனக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அமலாக்கத்துறை அனுப்பிய ரகசியக் கடிதத்தின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரிய தனது மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, கே.என். நேரு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் தங்களது தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னரே எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி, லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கெனவே கேவியட் மனுவைத் தாக்கல் செய்யப்பட்டனது. இதனால், கே.என். நேரு தரப்பின் கோரிக்கைகளுடன், லஞ்ச ஒழிப்புத்துறை முன்வைக்கும் வாதங்களும் இன்றைய விசாரணையில் முக்கியத்துவம் பெறும் என எதிப்பார்க்கப்பட்ட நிலையில், கே, என்,. நேரு தாக்கல் செய்த மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்திரவிட்டுள்ளது. இதையடுத்து கே.என்.நேரு எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல், முன்னாள் தி.மு.க அமைச்சர் அன்பில் மகேஷை விசாரணைக்காக நவம்பர் 4ஆம் தேதி மாலை 5மணி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவு வெளியாகியுள்ளது.

அன்பில் மகேஷுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல். அன்பில் மகேஷை 3 நாள்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி. சென்னை ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று பகல் 1 மணியில் இருந்து 4-ஆம் தேதி வரை அனுமதி மனதாலும் உடல் ரீதியாகவும் துன்புறுத்த கூடாது. வழக்கறிஞர் உடன் இருந்தாலும், விசாரணையை கேட்க கூடாத தொலைவில் தான் அவர் இருக்க வேண்டும். அன்பில் மகேஷ் ஜாமின் மனு மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மின்னனு சாதனங்களை திரும்ப தரக் கோரிய வழக்குகள் நவம்பர் 5-க்கு ஒத்திவைப்பு. தினமும் விசாரணை முடிந்து 10 நிமிடம் வழக்கறிஞரை சந்திக்க அன்பிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அன்பில் மகேஷ், நேரு ஆகியோரை அடுத்து சண்முகப்பிரியாவா துரைமுருகனா என்ற கேள்வி எழுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link