News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், முதல்வர் விஜய்க்கு தமிழக மக்களிடம் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. ஊழல் செய்தவர்களை விட மாட்டேன் என்று சொன்னதை நடத்திக் காட்டியிருக்கிறார் என்று பாராட்டுகிறார்கள்.

இந்த நிலையில் அன்பில் மகேஷ்க்கு சிறையில் கொடுக்கப்படும் உணவுப் பட்டியல் வெளியாகியுள்ளது. ஊழல் வழக்கில் சிறை சென்றுள்ள அன்பில் மகேஷ் ஒரு உணவுப்பிரியர். விதவிதமாக ஸ்பெஷலாக சாப்பிடும் நபர். ஆனால், அவருக்கு சிறையில் என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கணைய பாதிப்பு உள்ளதால் முதல் வகுப்பு சிறை மற்றும் எண்ணெய், புரதம் இல்லாத உணவு அன்பில் மகேஷ்க்கு வழங்க நீதிபதி சத்தியமூர்த்தி உத்தரவிட்டதை தொடர்ந்து புழல் சிறை உட்பட தமிழகச் சிறைகளில் ‘ஏ’ வகுப்பு (முதல் வகுப்பு) கைதிகளுக்கு மேம்படுத்தப்பட்ட உணவுப் பட்டியலின்படி பின்வரும் உணவுகள் வழங்கப்படுகின்றன.\

காலை உணவு – கோதுமை உப்புமா, பொங்கல், சாம்பார், சப்பாத்தி, இட்லி-சாம்பார், முட்டை, எலுமிச்சை சாதம் மற்றும் புதினா சாதம்.

மதிய உணவு – சோறு (அரிசி சாதம்), ரசம், காய்கறி குழம்பு, தயிர், நெய், கேசரி மற்றும் வாழைப்பழம் அல்லது கொய்யாப்பழம். அசைவ உணவு: முதல் வகுப்பு கைதிகளுக்கு வாரத்தில் 3 முறை (ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில்) சிக்கன் குழம்பு வழங்கப்படுகிறது.

இரவு உணவு – சோறு (அரிசி சாதம்), சாம்பார், ரசம் மற்றும் சப்பாத்தி.

இந்த வகையில் முதல் வகுப்பு கைதி ஒருவருக்கு தினசரி உணவுச் செலவுக்காக ரூ.207.89 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link