News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கரூர் சம்பவம் நடைபெற்ற தருணத்தில் முன்கூட்டியே மருத்துவமனைக்கு வந்து செந்தில்பாலாஜியுடன் சேர்ந்துநின்று, விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றுவது போன்று நீலிக்கண்ணீர் வடித்த அன்பில் மகேஷ்க்கு தக்க பதிலடியாக சிறைக்கு அனுப்பபட்டுள்ளார்.

முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்பான வழக்கில், வழக்கறிஞர் அலுவலகம் வந்து கைது செய்தது சரியான நடைமுறை அல்ல. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தோம். அன்பில் தீவிரவாதியல்ல, கைதை நீதிமன்றம் ஏற்க கூடாது என்று மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறினார்.

ஆனால், குற்றத்திற்கான ஆதாரம் இருப்பதால் வழக்கின் ஆரம்ப நிலையில் அன்பில் மகேஷுக்கு நீதிமன்ற காவல் வழங்க வேண்டும் என அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்டு நவம்பர் 6 வரை அன்பில் மகேஷுக்கு நீதிமன்ற காவல் வழங்கிய நீதிபதி சத்தியமூர்த்தி.

கணைய பாதிப்பு இருப்பதால் அன்பில் மகேஷுக்கு எண்ணெய், புரதம் இல்லாத உணவு வழங்க வேண்டும், முதல் வகுப்பு கொடுக்கவேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தியிருக்கிறார்.

புழல் சிறை வாயிலில் அன்பில் மகேஷ் அழைத்து வரப்பட்ட வாகனத்தை வழி மறித்து திமுகவினர் ரகளையில் ஈடுபட்டதுடன், அன்பில் மகிழ்ச்சிக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அவர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், அனைத்து திமுகவினரையும் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்லும்படி கோரி புழல் சிறைக்குள் சென்றார்..

சிறையில் தனது முதல் நாள் இரவை கழித்த அன்பில் மகேஷ் சிறை சட்ட விதிப்படி இன்று காலை 6 மணிக்கு தேநீர் அருந்தினார் என்று தகவல் வெளியாகியிருப்பதை தவெகவினர் வெடி வெடித்து கொண்டாடிவருகின்றனர்.

திமுக ஆட்சி காலத்தில் (2021–2026) ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு, டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ அனுமதிகளை வாங்கித் தருவதாகச் சொல்லி பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தப் பணம் பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் சேகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பி டி அரசகுமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அன்பில் மகேஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் தப்பிக்கவே முடியாதவகையில் சிக்கி இருக்கிறார்கள், இதனை தொடர்ந்து அன்பில் மகேஷ் மனைவி வங்கி கணக்குக்கு பணம் பரிவர்த்தனை நடந்ததற்கான ஆதாரத்தையும் கண்டு பிடித்துள்ளனர் போலீசார்.

பி டி அரசகுமாரின் சுமார் 20 வங்கி கணக்கில் இருந்தும், தலைமறைவாக இருக்கும் முத்துக்குமார் வாங்கி கணக்கில் இருந்தும் பணம் பரிவர்த்தனை நடந்து இருக்கிறது, அதாவது தனியார் பள்ளிகள் தரப்பில் இருந்து நேரடியாக பி டி அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் வங்கி கணக்குக்கு லஞ்ச பணம் சென்று இருக்கிறது, அங்கிருந்து அன்பில் மகேஷ் வங்கி கணக்குக்கு பணம் பரிவர்த்தனை ஆகியிருக்கிறது என கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், தலைமறைவாக இருக்கும் முத்துக்குமார் வங்கி கணக்கில் இருந்து சென்னையில் உள்ள ஒரு ஜவுளி கடையின் வங்கி கணக்குக்கு பணம் சென்று இருக்கிறது, அங்கிருந்து அன்பில் மகேஷ் மனைவியின் வங்கி கணக்குக்கு பணம் சென்றதும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது, மேலும் தனியார் பள்ளியில் இருந்து பிடி அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் வங்கி கணக்குக்கு லஞ்ச பணம் சென்ற, அடுத்த மூன்றாவது நாள் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதையும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் அன்பில் மகேஷின் நெருங்கிய நபரான வாளாடி கார்த்திக்கின் வங்கி கணக்கின் மூலமாகவும் லஞ்ச பணம் கைமாறி இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அன்பில் மகேஷ் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரும் இனி தப்பிக்கவே முடியாத ஒரு சூழல் ஏற்பட்டு இருக்கிறது. அந்த வகையில் அடுக்கடுக்கான ஆதாரங்கள் சிக்கி இருக்கிறது, இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி தருவதில் மட்டுமே சுமார் 400 கோடி வரை ஊழல் நடந்து இருக்கிறது, ஆனால் மற்ற டெண்டர் என பல முறைகேட்டில் அன்பில் மகேஷ் குடும்பத்திற்கு பணம் சென்று இருப்பதாகவும், சுமார் 1000கோடிக்கு மேல் அமெரிக்காவில் இருக்கும் அன்பில் மகேஷ் மைத்துனர் வசம் சென்று இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது ஊழல் பணம் ஹவாலா பணமாக அமெரிக்காவில் இருக்கும் அன்பில் மகேஷ் மனைவியின் சகோதரர் வசம் சென்று இருக்கும் நிலையில், ஆதாரப்பூர்வமாக சுமார் 400 கோடி வரை கடந்து திமுக ஆட்சியில் பள்ளி கல்வி துறையில் ஊழல் நடந்து இருக்கிறது என்று தகவல் வெளியானாலும், இது எப்படியும் 2 ஆயிரம் கோடிகளுக்கு மேல் அன்பில் மகேஷ் கடந்த திமுக ஆட்சியில் கல்லா காட்டியிருப்பார் என கூறப்படுகிறது.

ஆக, வசமாக சிக்கியிருக்கிறார் அன்பில் மகேஷ். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link