Share via:
ஜெம் வீரமணி வழக்கில் விசாரணைக்கு உள்ளான டிஜிபி அலுவலக நிர்வாகத்துறை
IG-ஆக இருந்த ராதிகா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கெனவே இந்த
வழக்கில் விசாரணைக்கு ஆஜரான அருண் ஐ.பி.எஸ், கண்ணன் ஐ.பி.எஸ். உள்ளிட்ட சில் அதிகாரிகள்
ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விஜய் ஆட்சியில் குற்றம் புரிந்தவர்களுக்கு உடனடி பதவி இல்லை என்பதை
அறிவிக்கும் வகையில் ஐ.பி.எஸ். டிரான்ஸ்ஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் தலைமைச்
செயலகத்தில் இருந்து முதன்மைச் செயலாளர் கார்த்திக் உத்தரவை வெளியிட்டுள்ளார்.
அதன்படி பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த சந்தோஷ் குமார்
ஐபிஎஸ் தற்போது சிவில் சப்ளை சிஐடி, சென்னை ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் ரூபேஷ் குமார் மீனா ஐ.பி.எஸ்.க்குப் பதிலாக
நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் சிவில் சப்ளை சிஐடி, ஐ.ஜி.யாக இருந்த ரூபேஷ் குமார் மீனா
ஐபிஏஸ் தற்போது திருச்சி மாநகர காவல் ஆணையராக
பதவி உயர்வுடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் காமினி ஐ.பி.எஸ்.க்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி கமிஷனராக இருந்த காமினி ஐ.பி.எஸ். தற்போது சென்னை டிஜிபி
அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ராதிகா ஐபிஎஸ்க்குப்
பதிலாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
விசாரணை வளையத்தில் இருப்பவர்கள் மீது சந்தேகம் தீரும் வரை காத்திருப்புப்
பட்டியல் வைத்திருப்பது விஜய் ஆட்சியின் தூய்மைக்கு சாட்சி.

