Share via:
சென்னை, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதாக முதல்வர்
விஜய் கொடுத்த அறிவிப்புக்கு அனைத்து எதிர்க்ட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அதோடு,
மீனவர்களும் போராட்டத்தை அறிவித்தனர்.
இந்த நிலையில் புதிய தலைமைச் செயலகத்தை பட்டினப்பாக்கத்துக்குப்
பதிலாக பல்லவன் இல்லத்தில் கட்டுவதற்கு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்லவன் இல்லம் என்பது சென்னையின் நடுமத்தியிலான அண்ணா சாலையில்
உள்ளது. இங்குள்ள 13.22 ஏக்கர் பல்லவன் இல்லத்தை பரிசீலித்து வருகிறது. இந்த வளாகத்தில்
தற்போது எம்.டி.சி., தலைமையகம், எஸ்.இ.டி.சி. தலைமையகம் மற்றும் எம்.டி.சி. பணிமனைகள்
உள்ளன.
இந்த அரசுக்கு தமிழக அரசுக்கு சொந்தமான நிலம் என்பதால் புதிதாக
நிலம் கையகப்படுத்துவத்கு அவசியம் இல்லை. இதனால் எந்த குடியிருப்பை காலி செய்யவேண்டிய
தேவையில்லை.
மேலும் இந்த இடத்தில் பஸ், புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்து
போக்குவரத்து வசதியும் இருப்பதால் ஊழியர்கள், பொதுமக்களும் தலைமைச் செயலகத்தை அணுகுவது
எளிது.
ஏற்கனவே திமுக ஆட்சியில் கட்டப்பட்டு பின்னர் மருத்துவமனையாக மாற்றப்பட்ட
ஓமந்தூரார் அரசு தோட்டத்துக்கு மிக அருகில் உள்ளது. பல்லவன் இல்லம் தேர்வு செய்யப்பட்டால்,
தலைமையகங்களை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு மாற்ற அரசு யோசித்து வருகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் முதல் ஆளாக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதாவது, ‘பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகம் அமைத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன்,
கூவம் ஆறு சுற்றுச்சூழல், வெள்ள வாய்ப்புகள் வரலாம். சென்னைக்கு வெளியே கட்டுவதே தீர்வு’
என்று தெரிவித்துள்ளார்.

