Share via:
இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மதுராந்தகம் தொகுதிக்கு ஏரி
சீரமைப்பு, புதிய பேருந்து நிலையம், தாராபுரம் தொகுதிக்கு குடிநீர் திட்டம், தொழிற்பேட்டை
விரிவாக்கம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று ஏராளமான வாக்குறுதிகளை முதல்வர் விஜய்
கொடுத்தார்.
சொன்னதை செய்யும் அரசு என்பதை நிரூபிக்கும் வகையில், இரண்டு தொகுதிகளுக்கும்
தேவையான நிதியை ஒதுக்கி, பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார்.
அதன்படி மதுராந்தகத்துக்கு ஏரிகள் – தடுப்பணைகள் சீரமைப்பு – 11.50 கோடி – அத்திமணம்
கிராமத்தில் புக்கத்துறை மதுவின் குறுக்கே ரூ.5 கோடியில் தடுப்பணை – செம்பூண்டி
ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறை ஏரியின் மதகுகள் ரூ.4.50 கோடியில் சீரமைப்பு செய்யப்படும்.
நெல்வாய் ஊராட்சியில் மடுவைத் தூர்வாரி, கரைகளை பலப்படுத்த ரூ.1.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தின்னலூர் ஊராட்சியில் ரூ.70 லட்சத்தில் புதிய
சமுதாய நலக்கூடம்
மதுராந்தகம் தொகுதியில் தலா
ரூ.30 லட்சத்தில் 6 நெல் கொள்முதல் நிலையங்கள் – ரூ.1.80 கோடி – விவசாயிகளின்
நீண்டநாள் கோரிக்கையான கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாக்க ரூ.20 கோடியில் 20,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட SEMI
COVERED கிடங்கு – ரூ.10 கோடியில்
25 ஏக்கர் பரப்பளவில் மானிய விதைப் பண்ணை.
அச்சரப்பாக்கத்தில் ரூ.20
கோடியில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. பாலாற்றின் குறுக்கே
படாளம் மற்றும் உதயம்பாக்கம் இடையே புதிய உயர்மட்ட தடுப்பணை கட்ட சாத்தியக்கூறு
ஆராய்ந்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
1984-ல் அமைக்கப்பட்ட 30
கி.மீ நீளமுள்ள மதுராந்தகம் உயர்மட்டக் கால்வாயை 30 ஏரிகளுக்கு நீர் கிடைக்கும்
வகையில் தூர்வாரி, கட்டமைப்புகள்
படிப்படியாக சீரமைக்கப்படும்.
மதுராந்தகம் அரசு
மருத்துவமனையில் ரூ.10 கோடியில் விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.
மதுராந்தகம் ஏரியில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா உருவாக்கப்படும்.
மதுராந்தகம் நகராட்சியில்
பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதி – படித்த இளைஞர்களுக்காக ரூ.3 கோடியில்
அறிவுசார் மையம் அமைக்கப்படும். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரூ.4 கோடியில்
வாரச்சந்தை மற்றும் புதிய மழைநீர் வடிகால் அமைப்புகள் உருவாக்கபடும்.
அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் – கருங்குழியில்
கிராமப்புற மாணவர்கள் பயன்பெற ரூ.80 லட்சத்தில் மினி விளையாட்டு மைதானம் உருவாக்கப்படும்.
மதுராந்தகம் துணை மின்
நிலையத்தில் கூடுதலாக ரூ.3 கோடியில் 25 MVA திறன் கொண்ட மின்மாற்றி நிறுவப்படும். ஏழைகளுக்கு புது
வீடு: மதுராந்தகம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்
மூலம்,
பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் வீடற்ற குடும்பங்களுக்கு
அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான வாழ்விடத்தை ஏற்படுத்த புதிய வீடுகள் கட்டி
வழங்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்டத்தின்
அனைத்து கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை
எடுத்துச்செல்லவும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் எளிதாக பயணம் செய்யவும் கூடுதல் பேருந்துகள் இயக்க
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல், தாராபுரம்
தொகுதிக்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் பல்வேறு திட்டங்கள் அறிவித்துள்ளார்.
1439 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி ஆற்றுநீரினை ஆதாரமாகக் கொண்ட
புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் 2700 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், குருவப்ப நாயக்கன்
பாளையத்தில் 87 குடும்பங்களுக்கு பட்டா 10 கோடி ரூபாய் மதிப்பில் 159 தூர்வாரும் பணிகள்
புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து சுமார் 13 ஆயிரம் குடிநீர் இணைப்புகள்
வழங்கப்பௌம்.
மூலனூரில் ஒரு புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம்
தாராபுரம் நகராட்சியில் சுமார் 6 கோடி மதிப்பில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி
40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெருவிளக்குகள் அமைக்கும் பணி 6 கோடி ரூபாய் மதிப்பில்
திடக்கழிவு மேலாண்மை பணிகள் அமைக்கப்படும்

