Share via:
சென்னையில் நேற்று இரவு மேகவெடிப்பு காரணமாக பெரும் கனமழை பெய்துள்ளது.. பாரிமுனையில் 35.8 செ.மீ., திருவொற்றியூரில் 32.1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மீட்பு நடவடிக்கை
குறித்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை முதல்வர் விஜய் அப்டேட் கேட்டறிந்து, நடவடிக்கைக்கு
உத்தரவிட்டுள்ளதால், சென்னை காலையிலே இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
நேற்று சென்னையில் அதிகபட்சமாக மழை பெய்த நிலையில், சென்னையில் உள்ள முக்கிய சுரங்கபாதைகள் எல்லாம் வழக்கமான நிலைக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் மழைநீர் தேங்காமல் விரைவாக வெளியேற வேண்டும் என்பதற்காக, கடந்த ஒரு மாதமாகவே 100 ஹெச்.பி. திறன் கொண்ட மோட்டார்கள் நிறுவப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதன் பலனாகவே தேங்கிய மழைநீரை விரைவாக வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன.
தமிழக
வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாப்பதிலும் மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.
வெள்ளம் வந்த பிறகு அவசரமாகச் செயல்படுவதைவிட, வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்த நிர்வாகம். அதற்கேற்ப, தேவையான உபகரணங்களை முன்கூட்டியே நிறுவி, மழைநீர் வெளியேற்றும் பணிகளுக்கான தயார் நிலையை உறுதிப்படுத்தியிருப்பது முக்கியமான நடவடிக்கையாகும்.
இது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ‘’முதலமைச்சர் ஒவ்வொரு மணிநேரமும் நடவடிக்கைகளை கேட்டறிந்து கொண்டு இருக்கிறார்… இது சாதாரண மழையாக எடுத்துக்கொள்ள முடியாது வழக்கமாக 69 செ.மீ. மழை தான் பெய்யும்… ஒரு மணிநேரம் கூட ஆகவில்லை 35.8 செ.மீ. பெய்துள்ளது. இப்போது உதவி தேவைப்படும் நபர்கள் 1913 எண்ணில் அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மழை பெய்துகொண்டிருக்கும்போதே, பைப் மற்றும் லாரிகள் மூலம் தேங்கிய மழைநீரை அசுர வேகத்தில் அகற்றும் தவெக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சென்னையைக் காப்பாற்றியிருக்கிறது.
விஜய் இருக்க அச்சமெதற்கு..?

