News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அரிசி விலை, பருப்பு விலை, எண்ணெய் விலை எக்கச்சக்கமாக அதிகரித்துவிட்டது என்று ஒரு குற்றச்சாட்டு நிலவும் நிலையில், மக்கள் தேவையை நிறைவேற்றும் வகையில் அதிரடி நடவடிக்கைக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை நேற்று முதல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் .வ.காந்திராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து அமைச்சர் வெங்கடரமணன், ‘’கர்நாடகா ஆந்திராவிலிருந்து பொன்னி அரிசியின் வரத்து குறைந்ததால் தமிழகத்தில் அரிசி விலை உயர்ந்திருக்கிறது இதை கட்டுப்படுத்தவும் பொது மக்களுக்கு உதவிடவும் இன்றுமுதல் தமிழ்நாட்டில் விளையும் உயர்தர சன்னரக அரிசி கிலோ 30 ரூபாய்க்கு அமுதம் அங்காடி மூலம் விற்பனை செய்யப்படும்.

2023 ம் ஆண்டு ரூபாய் 52 இருந்த ஒரு கிலோ அரிசி 2024 ஆம் ஆண்டில் ரூபாய் 60 ஆனது 2025 ஆம் ஆண்டில் ரூபாய் 65 உயர்ந்தது 2022 ரூபாய் 110 துவரம் பருப்பு விலை உயர்ந்தது 2024 ரூபாய் 171 துவரம் பருப்பு விலை உயர்வு அமுதம் அங்காடிகளில் குறைந்த விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். துவரம் பருப்பு 130 ரூபாய்க்கு வழங்குகிறோம். சன்னரக அரிசியைத்தான் மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

25,000 மெட்ரிக் டன் சன்னரக அரிசி 250 அமுதம் அங்காடிகள் வாயிலாக விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளோம் அமுதம் அங்காடிகளில் நேரடியாக வாங்கிக் கொள்ளலாம் கிலோ 30 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளலாம் சில குறிப்பிட்ட கட்சிகளை சேர்ந்த வியாபாரிகள் உணவுப் பொருட்களை பதுக்குகின்றனர் இதனால் விலைவாசி உயர்ந்துள்ளது உணவுப்பொருட்கள் பதுக்கல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்’’ என்று அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைச்சர்கள் வெங்கட்ரமணனும், காந்திராஜும் இணைந்து கூட்டுறவு அமுதம் அங்காடிகளில் கிலோ 30 ரூபாய்க்கு சன்னரக அரிசி விற்பனையை தொடங்கி வைத்தனர் என்றாலும், கொஞ்ச நேரத்திலேயே அரிசி இருப்பு தீர்த்துவிட்டது என்பது குறையாக மாறியிருக்கிறது. இதையும் அமைச்சர்கள்  கவனித்து அதிக இருப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது கோரிக்கையாக மாறியிருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link