Share via:
விஜய்க்கு எதிராக வாய்க்கொழுப்பாகப் பேசிவரும் திருமாவளவனுக்கு
செக் வைப்பது போது அன்புமணியுடன் தவெக நெருக்கம் காட்டிவருகிறது. இதையடுத்து, தவெக
கூட்டணியில் பாமக இடம்பெற்றால் விசிக வெளியேறும் என்று அமைச்சர் வன்னி அரசு அறிவித்திருப்பது
கடும் சர்ச்சையாகியுள்ளது.
நேற்றைய தினம் திண்டிவனத்தில் விசிக சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி
மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் வன்னி அரசு, ‘’பாமக
இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்குமா? என்று பலர் கேட்கின்றனர். இதற்கு பலமுறை பதில்
அளித்து ஓய்ந்துவிட்டோம். எங்கள் நிலைப்பாடு என்றுமே மாறாது.
சாதி ஒழிப்புக்கு எதிரானது விசிக. அமைச்சர் பதவி இருக்கும்; இல்லாமல்
போகும். எனக்கு பதவி முக்கியம் அல்ல. அண்ணன் திருமாவளவன்தான் முக்கியம். அவர் மேற்கொண்டுள்ள
இலக்கை நோக்கி பயணிப்பதுதான் நோக்கம். பாமக உள்ளே வந்தால் கூட்டணியில் இருந்து விசிக
வெளியேறும்’’ என்று வன்னி அரசு உறுதியுடன் பேசியிருக்கிறார்.
இந்த பேச்சு அர்த்தமுள்ளதாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு எனும் வகையில்
திருமாவளவன் பேச்சு அமைந்துள்ளது. திமுகவை சமாதானப்படுத்தும் வகையில் அவர், ‘’இப்போது
இடைத்தேர்தலில் இரண்டாமிடம் வந்ததற்கே மாபெரும் வெற்றி என்று பேசுகிற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், முதலிடம் வேண்டாமா? நீங்கள் வெற்றி பெறுவதற்குப் கூடுதல் வாக்குகள் தேவைப்படுகின்றன.
அதற்கு கூட்டணிக் கட்சிகளும் தேவைப்படுகின்றன.
35 மார்க் எடுத்தால்தான் பாஸ்; 34 மார்க் எடுத்ததற்குப் பெருமைப்பட்டு,
அடுத்த முறையும் 34 மார்க்தான் எடுப்பேன் என்று சொல்ல முடியுமா? 34 மார்க் எடுத்தாலும்
கூடுதலாக ஒரு மார்க் போடக்கூடிய வாத்தியார் யார் என்று பார்க்க வேண்டுமா இல்லையா? வெற்றி
பெறுவதற்குச் சின்னக் கட்சி, பெரிய கட்சி என்று எந்தப் பாகுபாடும் இல்லை; விசிகவிற்கு
ஒரு சதவீத வாக்கு வங்கிதான் இருக்கிறது என்று விமர்சனம் செய்தாலும் கூட, அந்தக் கட்சியும்
வெற்றிக்குத் தேவைப்படும். அதுதான் கூட்டணி கணக்கு.” என்று திமுகவுக்கு வலை வீசியிருக்கிறார்.
விஜய் கணக்கு என்னவோ..?

