Share via:
முந்தைய திமுக ஆட்சியில் ஓய்வுக்குப் பிறகு புதிய பதவி வழங்கப்பட்ட
முக்கிய அதிகாரிகளுக்கு எல்லாம் புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் விஜய் நெருக்கடி கொடுப்பதாகத்
தெரிகிறது. இதையடுத்து சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ராஜினாமா செய்துவருகிறார்கள்.
தமிழக போலீஸ் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு பணி
ஓய்வு பெற்றார். அவரது திறமையைக் கணக்கிட்டு திமுக அரசு, ‘தமிழ்நாடு தீயணைப்பு ஆணையம்”
என்ற புதிய அமைப்பை உருவாக்கி, அதன் தலைவராக சங்கர் ஜிவாலை நியமித்தது. அவர்
இப்போது தமிழ்நாடு தீயணைப்பு ஆணைய தலைவர் பதவியில் இருந்து சங்கர் ஜிவால் ராஜினாமா
செய்துள்ளார்.
இதேபோன்று, திமுக அரசால் நியமிக்கப்பட்ட தமிழ்நாடு சீருடை பணியாளர்
தேர்வு வாரியத்தின் தலைவரான ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரும் தனது பதவியை ராஜினாமா
செய்துள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட அபய் குமார்
சிங்கும் ராஜினாமா செய்தார். அதேபோல் தமிழக சட்டப்பேரவைச் செயலாளராக இருந்த சீனிவாசன்
தனது பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தார்.
இவர்கள் அனைவரும் திமுக ஆட்சியில் பதவி பெற்றவர்கள். விஜய் அரசு
கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இது விஜய் கொடுத்த அழுத்தமா அல்லது பாஜக அழுத்தமா என்று காவல் துறைக்குள் பேச்சு எழுகிறது.
இதெல்லாம் விஜய்க்குத் தெரிந்து நடக்கிறதா..?