News

வைகோவுக்கு சோபா பார்சல்..? மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா..?

Follow Us

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது.  தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றினார். இந்த பேரவைக் கூட்டத்துக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள், ‘வாயைத் திறங்க சி.எம்.’ என்ற வாசகத்தை சட்டையில் அணிந்துவந்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார்கள்.

அதோடு சட்டமன்ற வளாகத்தில் ’சிறு பெண்கள் இங்கே! சிங்கப் பெண்கள் எங்கே?’, ’பிஞ்சு குழந்தைகளின் கதறல் சத்தம் கேக்குதா?’ ‘வாயைத் திறங்க சி.எம்.’,  ‘திரையில் நாயகன், தரையில் வில்லன்’ என்று கருப்பு பேட்ஜ் அணிந்தும், பதாகை ஏந்தியும் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக தி.மு.க எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டார்கள்.

முதல் நாளில் சட்டமன்ற மரபை தவெக அரசு மாற்றியமைத்துள்ளது. அவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பாஜக அரசுக்கு பயந்து தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபையும் மாண்பையும் சீர்குலைத்த பயந்தாங்கோலி விஜய்க்கு கடும் கண்டனங்கள் என்றும் குரல் எழுப்பினார்கள்.

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் அர்லேகர், ‘’அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர்-க்கு பிறகு தமிழ்நாட்டில் புரட்சியை உருவாக்கியுள்ளார் விஜய் • விசில் புரட்சி மூலம் இமயமலை அளவுக்கு வெற்றியை பதிவு செய்துள்ளார் விஜய், கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் பொதுமக்களின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்துள்ளது, ஜாதி, மதங்களை கடந்து தவெக அரசை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர், தடைகள், பணபலத்தை தாண்டி ஜனநாயகத்தில் வென்றுள்ளார் விஜய்.

பொது அமைதியைப் பேணுவதும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதும் இந்த அரசின் முன்னுரிமையாகும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்புப் படைதமது பணிக் கடமையை மிகச் சிறப்பாக நிறைவேற்றும்.

முந்தைய அரசு போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த தவறி விட்டது. தவெக ஆட்சிக்கு வந்ததும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. போதைப்பொருட்களை ஒழிப்பதில் அரசு தனி கவனம். அமைதியான, பாதுகாப்பான தமிழகம் என்ற அடிப்படையில் அரசு செயல்படுகிறது. போதையில்லா தமிழகம் என்ற அடிப்படையில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது…’’ என்று புகழ்ந்து பேசியிருக்கிறார்.

இதுகுறித்து தவெகவினர், ‘’அரசியல் லாபத்திற்காக ஆளுநருடன் மோதலை உருவாக்கி, ஆளுநர் உரையே இல்லாத சட்டமன்ற அமர்வுகளை நடத்தியது திமுக. ஆனால் இன்று ஆளுநர் தமிழக அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை உள்ளடக்கிய அரசின் உரையை சட்டமன்றத்தில் வாசித்து வருகிறார். இது மோதல் அரசியல் அல்ல நிர்வாக முதிர்ச்சி. இதுதான் விஜய்யின் திறமை’’ என்று பாராட்டுகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link