Share via:
தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அமலாக்ககத்துறையினர் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடையவர்கள் என பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி இன்று காலை 5.30 மணியளவில் சென்னை தியாகராய நகர் சரவணா தெரு, திலக் தெரு மற்றும் விஜய் அப்பார்ட்மெண்டுகளில் உள்ள சில முக்கியஸ்தர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு ஓ.எம்.ஆர். சாலையிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இது குறித்து கிடைத்த தகவல்களின்படி தமிழகம் முழுவதும் உள்ள ரியல் எஸ்டேட் துறையினரின் சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
அதன் அடிப்படையில் தஞ்சாவூரில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் சண்முகம் என்பவரின் வீடு, அலுவலகத்தில் அதிகாலை முதலே சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.