Share via:
ஆண்டுதோறும் குறுவை நெல் சாகுபடி செய்வதற்கு,
மேட்டூர் அணை ஜுன் 12ம் நாளன்று திறப்பது வழக்கம். இந்நிலையில், மேட்டூர் அணையில் நீர்மட்டம்
79.56 அடி மட்டுமே உள்ளது. எனவே, இன்று திறக்கப்படவில்லை. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில்
விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
இந்த நிலையில் மேகதாது அணை திட்டத்திற்கு
விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் கர்நாடக முதலமைச்சர்
டி.கே.சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை
சந்தித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
மேகதாது அணை திட்டம் நிறைவேறினால் எப்போதுமே
காவிரியில் தண்ணீர் வராது, டெல்டா மாவட்டம் வறண்டுபோய்விடும் என்று விவசாயிகள் அச்சப்படும்
நிலையில், கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்குப் போயிருக்கிறார்
விஜய்.
டெல்லியில் இருந்து நேரடியாக சென்னைக்கு
வருவார் என்று சொல்லப்பட்ட நிலையில், இந்தியாவின் பிரசித்தி பெற்ற சக்தி பீடங்களில்
ஒன்றான கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று அங்கு நடக்கும் சண்டி யாகத்திலும்
கலந்து கொண்டிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். முதல்வரானதும் சென்ற கோயில்
மூகாம்பிகை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோருக்கும் பிடித்தமான
கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவிற்குச் சென்று சிவக்குமாரை சந்தித்து
மேட்டூருக்குத் தண்ணீர் விடும் வகையில் கோரிக்கை வைப்பார் என்று பார்த்தால், மூகாம்பிகை
கோயிலுக்குப் போய் யாகம் செய்கிறார். காவிரியை விட ஆட்சி முக்கியம்தானுங்க.
