News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க அரசு முடிவெடுத்து, அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அதேநேரம், எதிர்க்கட்சிகள் தூண்டுதலால் மீனவர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

மீனவர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று விஜய் அமைச்சர்கள் உறுதி அளித்த பிறகும் போராட்டம் நடத்துவதில் மீனவர்கள் உறுதி காட்டி வருகிறார்கள். இந்த விஷயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரடியாக களத்தில் உள்ளனர்.

இதுகுறித்து பேசும் தவெகவினர், ‘’ பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கான கட்டுமான பணிகள் மற்றும் அதன் டிசைன் உள்ளிட்டவற்றை திட்டமிட பிரத்யேகமாக 3 குழுக்கள் அமைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் ரூ.1,200 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட், விஜய்யின் ஜாதகப்படி கடற்கரைக்கு அருகில் தலைமைச் செயலகம் அமைந்தால், அது விஜய்க்கு சாதகமாக இருக்கும் என்றுகணித்ததாக கூறப்படுகிறது. இதனால் தலைமைச் செயலகத்திற்கான இடம் பட்டினபாக்கம் கடற்கரைக்கு அருகில் தேர்வானது. ஆனால் 9 மீனவ கிராமங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மீனவ கிராமங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தவெக அரசு திட்டமிட்டுள்ளார். இதற்காக மீனவப் பிரதிநிதிகளை விஜய் சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். இந்த பேச்சுவார்த்தையில் மீனவர்கள் சந்தேகம் முழுமையாக தீர்த்து வைக்கப்படும்.

அதன்பிறகும் இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதை கைவிட விஜய் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் மீனவர்களின் பேச்சை மதித்த முதல்வர் என்ற பெயர் கிடைக்கும். நிரந்தர அரசியல் ஆதரவும் கிடைக்கும். தலைமைச் செயலகம் அமைத்தாலும் விஜய்க்கு நல்ல பேர் கிடைக்கும். அமைக்காவிட்டாலும் நல்ல பேர் கிடைக்கும்’’ என்கிறார்.

அட்டகாச அரசியல் மூவ்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link