Share via:
திமுகவின் கூட்டணிக் கட்சிகள் எல்லாமே வெளியேறியது மட்டுமின்றி,
ஸ்டாலினுக்கு எதிராகப் பேசத் தொடங்கியிருக்கின்றன. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,
முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் வரிசையில் இப்போது துரை வைகோவும் ஸ்டாலினுக்கு எதிர்ப்புக்
கொடி எழுப்பியிருக்கிறார். திமுகவுடன் தொடர்வதா என்பதை வரும் 27ம் தேதி நிர்வாகிகளைக்
கூட்டி முடிவு செய்வதாக துரை வைகோ கூறியிருப்பது உடன்பிறப்புகளைக் கொதிக்க வைத்துள்ளது.
கடந்த தேர்தலில் திருமாவளவன் சங்கடப்படுவார் என்று ஆதரவு தர தயாராக
இருந்த ராமதாஸை சேர்த்துக் கொள்ளாமல் தவிர்த்தார். வைகோ சங்கடப்படுவார் என்று மல்லை
சத்யாவை சேர்த்துக் கொள்ளாமல் தவிர்த்தார் மு.க.ஸ்டாலின் ஆனால், இந்த இருவரும் ஒரே
தோல்விக்கே பாயை சுருட்டிக்கொண்டு ஓடியதுடன் ஸ்டாலின் முதுகில் குத்திவிட்டதாக திமுகவினர்
கொதிக்கிறார்கள்.
இதுகுறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ‘’துரைவைகோ பேச்சு அபத்தம்.
அவர் திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிஷ்டமாம். மானம் வெட்கம் ரோசம் இருந்திருந்தால்
அப்பொழுதே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்று கூறிவிட்டு, கூட்டணியை
விட்டு வெளியே வந்து தொலைச்சுருக்கலாமே….? இந்நேரம் திமுக வெற்றி பெற்றிருந்தால்
இவர் இப்படி பேட்டி கொடுத்திருப்பாரா…
வைகோ அவர்களுக்காவது நீண்ட அரசியல் பாரம்பரியம் பின்புலம் இருக்கிறது.
தந்தையின் புகழில் குளிர் காயும் அலரின் மகன் போன்றவர்கள் வாய்த்துடுக்கோடு பேசுவது
நல்லதல்ல…. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தன்னுடைய தொகுதிக்கு வருகை புரிந்த
முதல்வரை வரவேற்று பொன்னாடை அணிவித்தது அரசியல் நாகரீகம். நடைமுறை என்று கூட சொல்லலாம்.
ஆனால் நாங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிடாமல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு
விட்டோம் ஆகவே த.வெ.க.விற்கு ஆதரவு அளிக்க முடியவில்லையே என்று வருந்துகிறோம் என்று
பேட்டி கொடுப்பது என்ன நியாயம் என்று தெரியவில்லை. தி
.மு.க.வைப் பற்றியும் கலைஞரைப் பற்றியும் ஸ்டாலின் அவர்களைப் பற்றியும்
உங்கள் தந்தை வை.கோ.அவர்கள் பேசாத பேச்சா. அத்தனை ஏச்சு பேச்சுக்களையும் மறப்போம் மன்னிப்போம்
என்று புறந்தள்ளி விட்டு முற்றாக அழிந்து போன உங்கள் கட்சிக்கு உயிர்கொடுத்தது திமுக
என்பதை மறந்து விடாதீர்கள். பணத்திற்கும் பதவிக்கும் நேரத்திற்கு தக்க வேஷம் போடுபவர்களை
காலம் புறந்தள்ளும்.நாளை தமிழக அரசியல் வரலாறு எழுதப்படும் போது வருகிற இளம் தலைமுறை
உங்களை எள்ளி நகையாடும்..’’ என்கிறார்.
இரண்டு எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்யவைத்து, மீண்டும் தவெக
ஆதரவுடன் நிற்க வைக்கலாமா என்று துரை வைகோ யோசனை செய்துவருகிறாராம். அப்படி செய்தால்
விஜய்யும் விசில் சின்னத்தில் நிற்கச் சொன்னால் என்ன செய்வார் துரை வைகோ…?
