News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

திருச்சியில் விஜய் நன்றி அறிவிப்புக் கூட்டமும், அதில் விஜய் பேசிய விஷயமும் எக்கச்சக்க எதிர்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. எனக்கு ஆதரவு கொடுத்தீர்கள். இன்னமும் கொஞ்சம் சேர்த்து ஆதரவு கொடுத்திருக்கலாம் என்று மக்களிடம் கேட்டுக்கொண்ட விதமும், திமுக, அதிமுக மீது வைத்த விமர்சனங்களும்  அவர் இன்னமும் தேர்தல் பிரசாரத்தில் இருப்பது போலவே இருக்கிறது.

இது குறித்துப் பேசும் திமுகவினர், ‘’கவர்ச்சியைப் பார்த்து ஓட்டு போட்டாங்களாம். நாங்க என்ன…” என்று இன்று விஜய் பேசியபோதான உடல்மொழியை கவனித்தபோது தோன்றியது. அவர் வாய்திறந்து சொல்லவில்லையே தவிர அவர் சொல்லவந்தது என்னவென பார்ப்போருக்குப் புரிந்தது. மாண்புமிகு முதலமைச்சர் பதவிக்கென்று ஒரு கண்ணியம் இருக்கிறது. இத்தனை தரம்தாழ்ந்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. இதை எல்லாம் அடுத்த மாநிலத்தில் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? நம் மாநிலத்திற்கே அசிங்கம்.

தீயசக்தி, தூரசக்தி, பாரசக்தி, தூர்ந்துபோன சக்தி என்றெல்லாம் எழுதிக்கொடுத்த ரைமிங் வசனங்களைப் பேசுபவர், அந்த சக்திக்கு வாக்களித்த மக்களின் வாக்குகளால்தான் தன் ஆட்சி நடக்கிறது என்கிற குற்றவுணர்ச்சியோ சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு குறித்த விமர்சனங்கள் பற்றிய பொறுப்புணர்ச்சியோ இல்லை. அ.தி.மு.கவின் ஒரு தரப்பு வாக்குகளை சட்டமன்றத்தில் வாங்கிக்கொண்டு ‘மற்றும் பலர்’ என்று இன்னும் கிண்டலடிப்பது வக்கிரத்தின் உச்சம்.

இன்னும் ‘விக்டிம் ரோல்’ மட்டும்தான் அவர் பேச்சில் இருக்கிறது. ஆனால் அதைக் குற்றம் சொல்வதில் எந்த பயனுமில்லை. இதேமாதிரியான பழி போடும் பாணியில் வெற்றியை ருசித்துவிட்டவர் இன்னும் ஐந்தாண்டுகளுக்கு இதைத்தான் செய்யப்போகிறார். இதற்கு மயங்கி வாக்களித்தவர்களும் இதை விமர்சிக்காமல் ‘மாற்றம்’, ‘மாற்று அரசியல்’ என்று சப்பைக்கட்டு கட்டிய ஊடகங்களும்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்…’’ என்கிறார்கள்.

தூர்ந்துபோன சக்தி என்று கிண்டல் செய்துவிட்டு, அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் காலில் விழுந்து ஆட்சியைத் தக்கவைப்பது சரிதானா..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link