Share via:
ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், முதலாவது அமைச்சரவைக்
கூட்டம் நடைபெற்றது. முதல்வர் விஜய் உள்ளிட்ட 35 அமைச்சர்களும் மக்கள் நல திட்டங்கள்
,மேம்பாட்டு திட்டங்கள் பற்றி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்
மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் நிறுவனத்தின்
செயல்பாடுகள், அதன் கீழ் இயங்கும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பார்களின் எதிர்காலம்
குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. 717 டாஸ்மாக் கடைகளை
மூட உத்தரவிட்டது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வும் டாஸ்மாக்
ஊழியர்களின் போராட்டம் குறித்தும் பரிசீலனை செய்யப்படுகிறது.
தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தயாரிப்பதற்கான பணிகளும் இறுதிக்கட்டத்தை
எட்டியுள்ள நிலையில், அதுகுறித்த ஆலோசனைகள், நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும்
வருவாய் ஆதாரங்கள் குறித்து அமைச்சர்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் ஏற்கனவே கூறியது போல், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலையை வெளிப்படுத்தும்
வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவதற்கு ஆலோசனை செய்யப்படுகிறது.
மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுப்பதற்குத் தமிழகத்திற்கு உரிமை
இல்லை என்று கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே.
சிவகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இதுவரை மௌனம் காத்து வருகிறது.
அதேபோல் திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு அரசின்
முடிவை தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்தும் முடிவு
எடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
