Share via:
விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி தமிழ்நாடு முழுக்க கொண்டாட்டத்திற்கு
மெகா ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. விஜய் பிறந்த நாளில் முக்கியப் புள்ளிகள் அவர்
முன்னிலையில் சேர இருப்பதாக சொல்லப்படுகிறது.
விஜய்யின் 52வது பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி ஆடம்பரமாகக் கொண்டாட்டங்களைத்
தவிர்க்குமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டுள்ளார். அதேநேரம், அன்று காலை பெரம்பூர்
தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய எம்.எல்.ஏ. அலுவலகத்தை விஜய்
திறந்து வைக்க இருக்கிறார்.
பொதுமக்களுடன் கேக் வெட்டி
கொண்டாடுவதுடன் தனது தொகுதிக்குட்பட்ட ஏழை, எளிய மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை
வழங்கவும் இருக்கிறார். இதையடுத்து பனையூரில் இணைப்பு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு
வருகின்றன.
அன்றைய தினம் அதிமுகவின் மாஜி அமைச்சரான விஜயபாஸ்கர் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா
மண்டலத்தில் மக்கள் செல்வாக்குள்ள விஜயபாஸ்கர்
கட்சியில் சேர்வது தவெகவிற்குப் பெரும் பலமாக மாறும் என்று நினைக்கிரார்கள். அதேநேரம்,
விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு தவெகவுக்கு எதிர்காலத்தில் சிக்கலாக அமையும் என்று
தவெகவினர் கூறுகின்றனர்.
அதேபோன்று விஜய் பிறந்த நாளன்று அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில்நாதன்,
பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் ஆகியோரும் தவெகவில் ஐக்கியமாக உள்ளதாகத் தெரிகிறது.
இப்படி வந்தவர்களை எல்லாம் சேர்த்துக்கொண்டு இருந்தால் எங்களுக்கு
என்ன மரியாதை என்று விஜய் கட்சி நிர்வாகிகள் கொந்தளிக்கிறார்கள்.