Share via:
விஜய்க்கு சமமான போட்டியாளர் என்று கருதப்பட்ட அஜித் கார் பந்தயத்தைத்
தொடங்கிவைத்தது மட்டுமின்றி, வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிக கூட்டத்தைக் கூட்டி மாஸ்
காட்டியிருக்கிறார் விஜய். இதனால் அஜித்தின் இமேஜ் டோட்டலாக காலி என்கிறார்கள்.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்வதேச பந்தயப் பாதையில்
நடைபெற்ற மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை கார்
பந்தயத் தொடரின் 5வது சுற்றில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். லண்டனில் நடைபெறும் இந்த கார் பந்தயத்தைத் தொடங்கி
வைக்கக் கோரி, தனது சக நடிகரான தமிழக முதல்வர் விஜய்க்கு அஜித்குமார் தொலைபேசி வாயிலாக
அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட முதல்வர் விஜய் கடந்த 10ம் தேதி சென்னையிலிருந்து
புறப்பட்டு துபாய் வழியாக லண்டன் சென்றார்.
லண்டன் சென்ற முதல்வர் விஜய்க்கு அங்குள்ள வெளிநாடு வாழ் தமிழகர்கள்
பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து கார் பந்தயம் நடைபெறும் களத்திற்கு முதல்வர்
விஜய் நேரில் வந்தபோது, அவரை நோக்கி நடிகர் அஜித்குமார் நடந்து வந்தார். அப்போது ஓடிச்
சென்று அஜித்தைக் கட்டியணைத்து முத்தமிட்டு முதல்வர் விஜய் தனது அன்பைப் பகிர்ந்துகொண்டார்.
அஜித்தும் அவரை ஆரத் தழுவி உற்சாகமாக வரவேற்றார்.
பந்தயம் தொடங்குவதற்கு முன்பாக இருவரும் இணைந்து புகைப்படங்கள்
எடுத்துக்கொண்டனர். அப்போது அஜித்தின் பந்தயக் காரின் மீது அமர்ந்து முதல்வர் விஜய்
புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
44 பந்தயக் கார்கள் பங்கேற்ற இந்த சர்வதேச கார் பந்தயத் தொடரைத்
தமிழக முதல்வர் விஜய் பச்சைக்கொடி அசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார். பந்தயத்தைக்
காணவும், களம் காணும் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கவும் நடிகைகள் திரிஷா, ராதிகா
சரத்குமார் ஆகியோரும் வருகை தந்தனர்.
வழக்கமாக இதுபோன்ற பந்தயங்களுக்கு 25% ரசிகர்கள் வருவதே மிகவும்
அதிகம். விஜய் வருகையினால் முதல் நாளே அனைத்து இடங்களும் புக் ஆகி சரித்திர சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் விஜய் ஒரே நாளில் உலக அளவில் ஃபேமஸ் ஆகியிருக்கிறார்.
இந்த போட்டியில் 44 கார்கள் கலந்துகொண்ட நிலையில், அஜித் 38வது
ஆளாக வந்து மிகப்பெரும் தோல்வியைத் தழுவியிருக்கிறார். இதனால் அஜித்தின் இமேஜ் டோட்டலாக
காலியாகிவிட்டது என்று அஜித் ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.

