News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

முதல்வர் விஜய்யின் மிசா பேச்சுக்கு எதிராக ஆ.ராசாவின் ஆபாசப் பேச்சும், சேகர் பாபுவின் ஒருமைப் பேச்சும் தவெகவினரை ஆவேசமடைய வைத்துள்ளது. இருவரையும் தூக்கி உள்ளே போடுங்கள் என்று கொதிக்கிறார்கள்.

அமைச்சர் நிர்மல் குமாரின் பிறப்பை சந்தேகப்படும் வகையில், அவரது தாயாரை இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா. அதேபோல் முதல்வர் விஜய்யை ஓடுகாலி என்று ஒருமையில் திட்டியிருக்கிறார் சேகர் பாபு. இந்த இரண்டு விவகாரமும் திமுகவின் உண்மையான கோர முகத்தைக் காட்டியிருப்பதாக தவெக தொண்டர்கள் கொதிக்கிறார்கள். இருவரையும் பிடித்து ஜெயிலில் போட்டால்தான், திமுகவினர் வாயை அடக்குவார்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி, ‘’அரசியல் நாகரிகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைத்து, பொதுவெளியில் தரம் தாழ்ந்த பேச்சுகளைப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கொள்கை முழக்கம் போடும் திமுகவின் எம்பி அ.ராசாஅவர்களின் இந்த அருவருக்கத்தக்க போக்கு தலைகுனிவானது’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

அதேபோல் கம்யூனிஸ்ட், ‘’திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது. திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும் அதைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியவில்லை. அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டியுங்கள். அவருடைய தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.?’’ என்று கண்டித்துள்ளது.

அமைச்சர் ரமேஷ், ‘’இன்று சேகர்பாபு பேசினதை அவர் வீட்டில் இருக்கும் பெண்களிடம் காண்பிப்பாரா?.. அவர்களைப் போல எங்களுக்கும் பேசத் தெரியாமல் இல்லை.. எங்கள் முதல்வர் எங்களை அப்படி வளர்க்கவில்லை” என்று கொதித்திருக்கிறார்.

இதற்கு திமுகவினர், ‘’பொம்பளை விசயத்தில் உள்ளே போனார் என்று ஸ்டாலினை பேசிய நிர்மல் குமாரை கண்டிக்காத எவருக்கும் ஆ.ராசா பேசியதை பற்றி கேட்க எந்த வித தார்மீக உரிமையும் இல்லை. அடித்தவனை விட்டு விட்டு திருப்பி அடித்தவனை வன்முறையாளன் என்று முத்திரை குத்தும் வேலையை செய்யும் எவனும் அயோக்கியனே.,,’’ என்று கொதிக்கிறார்கள்.

ஆபாச அரசியலுக்கு முதல்வர் விஜய் முடிவு கட்ட வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link