News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகள்தான் இப்போது பரபரப்பு அரசியல். இந்த தொகுதிகளின் தேர்தல் வரலாறை முதலில் பார்க்கலாம்.

1952- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தனித்தொகுதி இது. இந்தத் தொகுதி மதுராந்தகம். இங்கு 1952, 1957, 1962 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியும், 1980, 1989, 1991, 2001, 2011, 2021, 2026 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில்  அதிமுகவும், 1967, 1971, 1977, 1984, 1996, 2016 ஆகிய தேர்தல்களில் திமுகவும் வெற்றி பெற்றிருக்கின்றன.

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேல் 69 ஆயிரத்து 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். தவெக சார்பில் போட்டியிட்ட எழில் கேத்ரின் எழில்மலை 62 ஆயிரத்து 90 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும், திமுக வேட்பாளர் அமுலு பொன்மலர் 59 ஆயிரத்து 838 வாக்குகள் பெற்று 3வது இடத்தையும் பிடித்திருந்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தொகுதி கடந்த 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு தொகுதி தனித் தொகுதியாக வரையறுக்கப்பட்டது. முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்த 1951 ஆம் ஆண்டு சுயேட்சை எம்எல்ஏ வெற்றி பெற்ற நிலையில், அதன் பின் நடந்த 17 சட்டமன்றத் தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை வெற்றி பெற்றிருக்கின்றன. 1967, 1971, 1989, 1996, 2006, 2021 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் திமுகவும் 1977, 1980, 1984, 1991, 2011, 2026 ஆகிய தேர்தல்களில் அதிமுகவும் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கின்றன.

தவிர 1957, 1962 ஆகிய தேர்தல்களில் தனித்தும், 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலும் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது. 2001ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் பாமகவும் தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்றது. கடைசியாக 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா 81 ஆயிரத்து 100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். திமுக சார்பில் போட்டியிட்ட இந்திராணி 64 ஆயிரத்து 373 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும், தவெக வேட்பாளர் கவுரி சித்ரா 46 ஆயிரத்து 438 வாக்குகள் பெற்று மூன்றாம் இடைத்தையும் பிடித்திருந்தார்.

இவ்விரு தொகுதிகளும் திமுக, அதிமுக, மற்றும் புதிதாக உருவெடுத்துள்ள தவெக ஆகியவற்றுக்கு இடையில் போட்டி சூடு பிடித்துள்ளது.

கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே கூட்டணியுடன் அதிமுக போட்டியிடுகிறது. ஆனால், திமுக இந்த முறை தனித்துப் போட்டியிடுகிறது. திமுகவுடன் போட்டியிட்ட காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இப்போது விஜய் பக்கம் தாவியிருக்கின்றன,

இந்நிலையில் எப்போதும் போல் நாம் தமிழரும் போட்டியில் குதித்துள்ளதால், நான்குமுனை போட்டி உருவாகி இருக்கிறது.

இழந்த தொகுதிகளை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காக அதிமுக தீவிரம் காட்டுகிறது. அதிமுக வெல்லவேண்டும் என்பதற்காகவே மதுராந்தகம் தொகுதியில் திமுக வெளியூர் வேட்பாளரை இறக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் திமுக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தாராபுரத்தில் அதிமுக வீக் வேட்பாளரை களம் இறக்கியிருக்கிறது.

இந்த இரண்டு திருட்டுக் கூட்டணியையும் அம்பலப்படுத்தி மீண்டும் விஜய் வெல்வார் என்றே மக்கள் கணிக்கிறார்கள். அப்படியே நடக்கட்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link