News

வன்னியரசு, ஷாஜகான் பதவியேற்பு. விஜய்க்கு புதிய கூட்டணி ரெடி.

Follow Us

கடந்த ஆட்சியில் சவுக்கு சங்கருக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவந்த ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் முடிந்து அவர் தோல்வி அடைந்ததும் எடப்பாடிக்கு குழி பறித்து குப்புறத் தள்ளியிருக்கிறார்.

சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் திமுகவை போட்டு பொளப்பார், புதிய ஆட்சியின் மீது கடுமையாக விமர்சனம் வைப்பார் என்றெல்லாம் எதிர்பார்த்தால், அவர் நேரடியாக அதிமுக மீது பாய்ந்து அவரது உண்மையான முகத்தைக் காட்டியிருக்கிறார்.

அதிமுகவை உடைக்க வேண்டும், அங்கிருக்கும் ஆட்களை எல்லாம் விஜய் கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக தேர்தலுக்கு முன்பிருந்தே அவர் விஜய் விசுவாசியாக மாறியிருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

இன்று அவர் விஜய் கட்சியில் அதிமுகவினர் சேர்வதை நியாயப்படுத்தியிருக்கிறார். அதில் அவர், ‘’2026 சட்டப்பேரவை தேர்தலில், மிக மோசமான தோல்வியை எம்ஜிஆர் மற்றும் செல்வி ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக சந்தித்திருக்கிறது. இந்த தோல்விக்கு யார் பொறுப்பு என்று அதிமுக தொண்டர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். என்னைத் தவிர எல்லாரும் பொறுப்பு என்கிறார் “புரட்சித் தமிழர்” எடப்பாடி பழனிச்சாமி.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கோ, புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களுக்கோ சொந்தமாக குடும்பம் இல்லை. ஆனால் “புரட்சித் தமிழர்” எடப்பாடி பழனிச்சாமிக்கு குடும்பம் உள்ளது. இன்று அதிமுகவில் எல்லா முடிவுகளையும் எடுப்பது அவர் மகன் மிதுன் மட்டுமே. மிதுன் சொல்வதுதான் இன்று அதிமுகவில் வேதவாக்கு. மிதுன் தான் அதிமுகவை பொருத்தவரை கடவுள். மிதுன் பேச்சை அவர் தந்தை எடப்பாடி பழனிச்சாமியே மீற மாட்டார்.

தொண்டர்களால் உருவான கட்சியான அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் உருவாவது சரியா ? தன் மகன் மிதுன் துணை முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக, திமுகவோடு கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி உதயநிதியை “பாஷ்யம் அபினேஷ் வீட்டில்” சந்தித்ததை மறுக்க அவரால் முடியுமா ? இந்த சந்திப்பு நடந்ததே அவர் மகன் மிதுன் அழுத்தத்தால்தான் என்பதை எடப்பாடி பழனிசாமி மறுப்பாரா ?

இன்று மக்கள் முன் எழும் கேள்வி, 2 கோடி தொண்டர்களை கொண்ட அதிமுக இயக்கத்தை வழிநடத்த எடப்பாடி பழனிச்சாமி தகுதியானவரா என்பது மட்டுமே. எனக்கு என்று குடும்பமே கிடையாது. அதனால் நான் ஊழல் செய்ய மாட்டேன் என்று பறைசாற்றி அதன் அடிப்படையில் கட்சி நடத்திய செல்வி ஜெயலலிதா அதிமுகவை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றாரா, மகன் மிதுன் பேச்சை கேட்டு அதிமுகவை நடத்தும் எடப்பாடி பழனிச்சாமி இட்டுச் செல்வாரா என்பது மட்டுமே…’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தல் நடக்கும் வரையிலும் அதிமுகவில் மிதுனின் தலையீடு சுத்தமாக இல்லை என்று அடித்துப்பேசிக்கொண்டு இருந்தார் சவுக்கு சங்கர். அதற்குள் என்ன நடந்துவிட்டதோ..? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link