Share via:
அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா
ஆகிய இருவரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில்
இணைந்தனர். அந்த இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 7 பேர் ராஜினாமா செய்தார்கள் என்றாலும், மீதம் உள்ள 5
தொகுதிகளுக்கு வழக்கு முடியும் வரை தேர்தல் இல்லை. தமிழக வெற்றி கழக சார்பாக மதுராந்தகம்
தொகுதிக்கு மரகதம் குமரவேலு மற்றும் தாராபுரம் தொகுதிக்கு சத்தியபாமா ஆகிய இருவரையும்
மீண்டும் வேட்பாளராக அறிவிக்க இருக்கிறது தமிழக வெற்றி கழக தலைமை.
கடந்த தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமாரவேல்
69,284 வாக்குகள் பெற்றார். அடுத்துவந்த திமுக வேட்பாளர் 59,838 வாக்குகளும் விஜய்
கட்சியின் கேத்தரின் 62,090 வாக்குகளும் பெற்றார்.
தாராபுரத்தில் சத்யபாமா 81,100 வாக்குகள் பெற்றார். அடுத்துவந்த
இந்திரானி 64,373 வாக்குகளும், விஜய் கட்சியின் கெளரி சித்ரா 46,438 வாக்குகளும் பெற்றனர்.
இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக, திமுக வெல்வதால் எந்த நன்மையும்
கிடைக்கப்போவதில்லை. அதேநேரம் தவெக தோல்வி அடைந்தால் விஜய் இமேஜ் சரியும். அதனால் தேர்தலில்
இரண்டு கட்சிகளும் ஒரு தொகுதியில் டம்மி வேட்பாளர் போடுவது என்று திட்டமிட்டிருப்பதாக
சொல்லப்படுகிறது.
இதில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமாரவேலுக்கு தனிப்பட்ட
செல்வாக்கு இருப்பதால், அங்கு தவெக எளிதாக வெல்வதற்கு வாய்ப்பு உண்டு. தாராபுரத்திற்கு
விஜய் வந்து பிரச்சாரம் செய்தால் வெற்றி நிச்சயம்.
திமுக, அதிமுக கள்ளக்கூட்டணியை அம்பலப்படுத்த விஜய் வரவேண்டும்,
ஜெயிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.

