News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி கூறியிருப்பதை சுட்டிக்காட்டி பேசிய முதல்வர் விஜய், ‘இது மாதிரி பேசி பேசி தான் மக்கள் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து தற்பொழுது எதிர்க்கட்சியில் திமுக உக்கார்ந்து இருக்கிறது’ என்று சட்டமன்றத்தில் குற்றம் சாட்டினார்.

அதோடு, சர்க்காரியா கமிஷனில் மாறனுக்கு கமிஷன் கொடுக்கப்பட்டது பற்றிய ஆதாரங்களைப் பேசினார்.  மேலும், ‘’பெண்களை தாயாக, அக்காவாக, தங்கையாக, தோழியாக பார்க்கும் அரசு இது. பெண்கள் அச்சமற்று சமூகத்தில் வாழ்வதற்கு எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக எந்த குற்றம் நடந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் மக்களையோ, பெண்களையோ தரம் தாழ்த்தி யாரும் பேச வேண்டாம் பெண்களை பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசுமுன் தங்கள் வீடுகளில் இருக்கும் பெண்களை நினைத்துப் பாருங்கள். தமிழ்நாட்டில் சமீபமாக ஆபாச நதி ஓடி வருகிறது. பெண்கள் குறித்து யாராவது இனி அவதூறாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும்.

இந்த ரெண்டு டிபார்ட்மெண்ட் பைல ஓபன் பண்ணதுக்கு நாறுது. ஆதாரம் கேட்டீங்களே ஆதாரம் போதுமா?’’ என்று ஆவேசம் காட்டினார்.

இதையடுத்து விஜய் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கொடுப்பதற்கு உதயநிதியும் மற்றவர்களும் எழுந்துநின்றார்கள். திமுகவினர் சபாநாயகரை சுற்றி நின்று குரல் கொடுத்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று செங்கோட்டையன் கூறினாலும், பேசுவதற்கு அனுமதிக்கலாம் என்று விஜய் கூறினார்.

ஆனாலும், சபாநாயகர் அனுமதி வைக்கவில்லை. விஜய் பேசியபோது சத்தம் போட்டதால் அனுமதியில்லை என்று கூறிவிட்டார். இதையடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்துவிட்டனர். இம்புட்டுத்தானா உதயநிதியின் வீரம்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link