News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழக அரசு பிறப்பித்துள்ள திடீர் உத்தரவின்படி 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழகத்தில் சமீப காலமாகவே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், ஐ.பி.எஸ். அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இது குறித்த அரசாணைகளையும் தமிழக தலைமை செயலாளர் வெளியிட்டு வருகிறார்.

 

இந்த உத்தரவின்படி அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல் தொழில்துறை ஆணையர் மற்றும் இயக்குனராக நிர்மல்ராஜ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

 

பூஜா குல்கர்னி ஐ.ஏ.எஸ். தற்போது புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஹர்ஷகே மீனா ஐ.ஏ.எஸ். குடிமைப் பொருள் வழங்கல் துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

நேற்று (செப்.25) சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அடையாள ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை செயலாளராக அர்ச்சனா பட்னாயக் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link