Share via:
பரந்தூர் விமான நிலையம் திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது போன்று,
செம்மஞ்சேரியில் சர்வதேச தரத்தில் மெகா விளையாட்டு நகரம் அமைப்பதற்கான திமுக கொண்டுவந்த
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்தை ரத்து செய்திருக்கிறது தவெக அரசு.
261 கோடி செலவில் செம்மஞ்சேரியில் 80 ஏக்கரில் உலகளாவிய விளையாட்டு
மையம், சர்வதேச கால்பந்து மைதானம், ஒலிம்பிக் தர வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், நீர்
விளையாட்டு நிலைகள் என்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தோடு இணைத்து திமுக அரசு திட்டமிட்டு
வேலை தொடங்கியிருந்தது.
ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்து வைத்திருந்த இந்த 100 ஏக்கர்
அரசு நிலத்தை அரும்பாடுபட்டு திமுக அரசு மீட்டெடுத்தது. இந்த நிலத்தின் மதிப்பு சுமார்
2010 கோடி என்கிறார்கள். தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் ஜேப்பியாரின் மாப்பிள்ளை.
ஜேப்பியார் கல்லூரியின் இயக்குநர்.
அதனால்தான் தமிழ் நாடு அரசு குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்தை
ரத்து செய்ததா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

