News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இத்தனை காலமும் சீமானுக்கு எதிராக வீடியோ மேல் வீடியோ போட்டு திட்டிக்கொண்டிருந்த நடிகை விஜயலட்சுமி திடீரென ட்விஸ்ட் வீடியோ வெளியிட்டுள்ளார். ’இனி என்னோட ஆதரவு சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும்தான், த்ரிஷாவுக்காக என்னை அவமானப்படுத்துறீங்க’ என்று தவெகவினரை நோக்கி தாக்குதல் நடத்தியிருக்கிறார்.

நடிகை விஜயலட்சுமியின் புதிய வீடியோ பரபரப்பாகியுள்ளது.  அந்த வீடியோவில் அவர், ‘தன்னையும் சீமானையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருகிறார்கள். உச்சநீதிமன்றம் வரை எங்கள் விஷயம் போய் முடிந்துவிட்டது. தவறை உணர்ந்து ஒருவர் மன்னிப்பு கேட்கும்போது, அவரைத் தொடர்ந்து விமர்சிக்காமல் வாழவிடுவதுதான் மனிதநேயம்.

நான் இனி சீமானுக்கு சப்போர்ட் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார். மேலும் எழுதி வச்சுக்கோங்க இந்த வீடியோவை நான் ஆகஸ்ட் 26 ஆம் தேதி 2026 இல் வெளியிடுகிறேன். வரும் இடைத்தேர்தலில் சீமான் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுவதாக கேள்விப்பட்டேன். அவர் அப்படி போட்டியிட்டால் நான் அவருக்கு சப்போர்ட் கொடுப்பேன்.

இனி என்னுடைய சப்போர்ட் அவருக்கு தான். உச்சநீதிமன்றத்தில் சொன்ன மாதிரியே அவரும் அவர் கட்சியினரும் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் நான் இதுவரைக்கும் விஜய் அண்ணா என்று அவருக்காக வீடியோ வெளியிட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அண்ணாவுடைய ரசிகர்கள் நீங்கள் என்னையே அசிங்கப்படுத்திட்டீங்க.. திரிஷாவுக்காக என்னை இழுத்து கேவலப்படுத்துறீங்களா? இது என்ன வகையில் நியாயம்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதென்ன புதிய திருப்பம் என்று தெரியாமல் நாம் தமிழர் தம்பிகள் தவிக்கிறார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link