News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழக வெற்றி கழகத்தை தேசிய வெற்றிக் கழகமாக மாற்றி, நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு விஜய் பிரதமராக மாறுவார் என்று தவெகவினர் உற்சாகக் குரல் கொடுத்துவருகின்றனர். இந்த நிலையில் இந்தியா டுடே வெளியிட்டுள்ள சர்வே நாடு முழுக்க அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியா டுடே மூட் ஆஃப் த நேஷன் சர்வே படி, இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் பாஜக 261, என்.டி.ஏ. 326 சீட்டுக்களும் வெல்லும். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 106 சீட்டுக்கள் தான் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. அதாவது, இளைஞர்கள் காங்கிரசை நம்பவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அதேநேரம், யார் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்ற போட்டியில் மூன்றாவது இடத்திற்கு விஜய் வந்திருகிறார். விஜய் தமிழ்நாட்டில் 100 நாள் ஆட்சியை மட்டுமே முடித்துள்ளார். ஆனால், அடுத்த பிரதமர் என்ற கேள்விக்கு 9% பேர் முதலமைச்சர் விஜய்யை தேர்வு செய்திருக்கிறார்கள்.

இதில் மோடிக்கு 49%, ராகுல் 27% கிடைத்துள்ளது. இத்தனை ஆண்டுகள் தேசிய அரசியல் அனுபவம் இருக்கிறது. ஆனால் விஜய் தேசிய அரசியல் பற்றி பேசவில்லை. அதற்குள்  9% என்றால், நாளை பிரதமர் வேட்பாளராக களமிறங்கினால் எங்கே போய் நிற்கும் இந்த எண்ணிக்கை என்று அவரது ரசிகர்கள் கேட்கிறார்கள்.

நியாயமான கேள்விதான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link