Share via:
கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தாலும் ஸ்டாலின் வாக்களித்த மக்களைச்
சந்தித்து நன்றி கூறினார். அவருக்குப் பின்னே நின்றபடி கண்ணீர் விட்டு கலங்கி அழுதார்
சேகர் பாபு. இந்த நிலையில் இது நாடகம் என்றும் அவரை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து
தூக்க வேண்டும் என்றும் முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன் பற்ற வைத்திருக்கிறார்.
நேற்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். கொளத்தூர் மேயர் சிட்டிபாபு மேம்பாலத்தில் இருந்து
தொண்டர்கள் படை சூழ கொளத்தூர் ஜி.கே.எம் காலனி வழியாக பெரவள்ளூர் காவல் நிலையம், சிவ
இளங்கோ சாலை, அகரம் சந்திப்பு வரை திறந்தவெளி ஜீப்பில் சென்று பொதுமக்களுக்கு நன்றி
தெரிவித்தார்.
அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கண்கலங்கியபடி மீண்டு வா
ஸ்டாலினே…மீண்டு வா தலைவா… என கோஷமிட்டனர். தொண்டர்கள் கண்கலங்கியதை பார்த்து ஸ்டாலினும்
கண்கலங்கினார். வழிநெடுகிலும் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு
உற்சாகமாக நன்றி தெரிவித்தனர். அப்போது பெண்கள் பலரும் கதறி அழுத்தனர். இதனைக் கண்ட
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்கலங்கிய நிலையில், தொண்டர்களை பார்த்து கை அசைத்து அழக்கூடாது
என சைகை காண்பித்து தேற்றினார்.
இந்த நிலையில் ஸ்டாலின் தோல்விக்கு முழு காரணம் சேகர் பாபு மட்டும்தான்.
தன்னுடைய தொகுதியை பார்த்துக்கொண்ட சேகர் பாபு, முதல்வர் தொகுதியின் மீது அக்கறை காட்டவில்லை.
அதனால் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கொதித்திருக்கிறார்.
அதேபோல் சேகர் பாபுவின் அழுகையை போலி என்று விமர்சனம் செய்பவர்கள்,
‘’கண்ணு தெரியாதவர்கள் போராட்டம் செய்யும் போது தடி கொண்ட அடிக்கும் போது… அப்பாவி
தூய்மை பணியாளர்கள் போராட்டம் செய்யும் போது அடித்து விரட்டிய போது… பகுதி நேர ஆசிரியர்கள்
போராட்டம் செய்த போது… போலீஸ் கதற கதற அடித்தது அப்பொழுது சேகர்பாபு அழுகவில்லை தெய்வம்
நின்று கொல்லும்’’ என்று விமர்சனம் வைக்கிறார்கள்.
சேகர்பாபு அதரவாளர்களோ, ‘’விஜய் அலையினை யாரும் கவனிக்கவில்லை.
அதனால் ஏற்பட்ட தோல்வி. இதற்கு சேகர் பாபு காரணம் இல்லை. பரந்தாமனுக்கு சீட் கொடுக்கவில்லை
என்ற கோபத்தில் உட்கட்சி மோதலைத் தூண்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’
என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
யார் மீதாவது ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா அல்லது பொம்மை போன்று
வேடிக்கை பார்ப்பாரா..?
