News

விஜய்க்கு அமைச்சரவை ரெடி. த்ரிஷாவுக்கு பதவி இல்லையாம்

Follow Us

ஒன்பது பெரிய நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளனர். அவற்றில் ஆறு திமுகவுக்கு சாதகமாகவும், இரண்டு அதிமுக கட்சிக்கு சாதகமாகவும் ஒன்று விஜய்க்கு சாதகமாகவும் வந்துள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் வித்தியாசமாக இருப்பது சகஜம், ஆனால், தேர்தலுக்குப்பிந்தைய சர்வேயும் இப்படி வந்திருக்கிறது என்றால், எல்லாமே செட்டப் என்பது உறுதியாகிறது என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மீண்டும் திமுக அதிமுக இடையில்தான் போட்டி என்பதை வெளியாகி உள்ள பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திட்டவட்டமாக கூறுகின்றன தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தலில் போட்டி திமுக மற்றும் தங்களுக்கு இடையில் தான் என தொடர்ந்து அவர் கூறி வந்த நிலையில், அவர் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

2016 சட்டமன்ற தேர்தலில் இப்படித்தான் திமுக கூட்டணியே வெல்லும் என பல எக்சிட் போல் கணிப்புகள் கூறின. 2024 மக்களவை தேர்தலில் பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்று சொல்லப்பட்டன. எல்லாமே பொய்யாகிப் போகின.

தமிழகத்துடன் தேர்தல் நடந்துள்ள கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 78 முதல் 90 இடங்களை பிடிப்பார்கள் என்றும் இடதுசாரிகள் 49 முதல் 62 இடங்களை பிடிப்பார்கள் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அதிகபட்ச மூன்று இடங்களை பிடிப்பார்கள் என்றும் கணித்துள்ளது

புதுச்சேரியில் ரங்கசாமி கூட்டணி 16 முதல் 20 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி ஆறு முதல் எட்டு இடங்களையும் விஜய் தமிழக வெற்றி கழகம் இரண்டு முதல் நான்கு இடங்களையும் பிடிக்கும் என ஆக்சிஸ் இந்தியா தேர்தல் கணிப்பை வெளியிட்டுள்ளது

அசாம் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று ndtv ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது பாஜக 88 முதல் 100 இடங்களை பெறும் என்றும் காங்கிரஸ் 24 முதல் 36 இடங்களை பெறும் என்றும் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது

மேற்குவங்க மாநிலத்தில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்பது போலத்தான் தரவுகளை வெளியிட்டுள்ளன. 148 இடங்கள் தேவைப்படும் நிலையில் கருத்துக்கணிப்புகள் 130 முதல் 150 இடங்கள் வரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கு 130 முதல் 160 இடங்கள் வரையும் கொடுக்கின்றன.

எது உண்மை என்பது 4ம் தேதி தெரிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link