Share via:
விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதில் திமுகவை யாரும் அடித்துக்கொள்ளவே
முடியாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில்
சிபிஐ குடைச்சல் ஆரம்பமாகும் என்றே தெரியவருகிறது.
இந்த வழக்கு சுவாரஸ்யமானது. அதாவது, டிரான்ஸ்பார்மர் வாங்க திமுக
அரசு டெண்டர் கொடுக்கிறது. அந்த டெண்டருக்கு பல நிறுவனங்கள் போட்டி போடுகிறது. அனைவரையும்
மின்சார வாரியத்தின் அதிகாரி காசி என்பவர் செந்தில் பாலாஜி வீட்டில் சந்தித்து கூட்டம்
போடுகிறார்.
இதையடுத்து அனைவரும் அதாவது 15 நிறுவனங்கள் வரை ஒரே விலைக்கு டெண்டர்
கேட்கிறார்கள். அதுவும் அரசு நிர்ணயித்த விலையை விட, சந்தை விலையை விட மிக அதிகமான
விலைக்கு டெண்டர் கொடுக்கிறார்கள். டெண்டர் கொடுத்த அனைவருக்கும் அதிக விலைக்கு ஆர்டர்
பிரித்து கொடுக்கப்படுகிறது.
இதனால் அரசுக்கு 397 கோடி அதிக செலவு. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு
397 கோடி லாபம். லஞ்ச ஒழிப்புத்துறை இந்த புகாரில் எந்த உண்மையும் இல்லை என்று வழக்கை
இழுத்து மூடிவிட்டது. தற்பொழுது உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து மாநில அரசு
தலையிட முடியாத வகையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான மின்மாற்றி கொள்முதல்
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த, ஊழல் தடுப்பு போலீசாருக்கு (DVAC) அனுமதி
வழங்குவதில் தமிழக அரசு 20 மாதங்கள் தாமதித்துள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் வெறும் பூர்வாங்க விசாரணையாக அதை
தரம் குறைத்து, அதன் வரம்பை டான்ஜெட்கோ நிதிக் கட்டுப்பாட்டாளர் (கொள்முதல்) வி. காசி
என்பவருடன் மட்டும் மட்டுப்படுத்தியும் அனுமதி வழங்கியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகளை
பார்க்கும் போது, உண்மையை மூடி மறைக்கவும், அரசியல்வாதிகளையும், உயர் அரசு அதிகாரிகளையும்
காப்பாற்றவும் தமிழக அரசு முயற்சித்துள்ளதோ என்கிற நியாயமான சந்தேகம் எழுகிறது என்று
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதில் சிபிஐ வேகம் காட்டுமா அல்லது இழுத்தடிக்கும் வேலை தொடருமா?