Share via:
விஜய் நேரடியாக துணை முதல்வர் பதவி தருவதற்கு உறுதி கொடுத்தபிறகே
கூட்டணியில் சேர்ந்திருக்கிறார் திருமாவளவன். ஒரே நேரத்தில் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி,
விஜய் ஆகியோருக்கு சிக்னல் கொடுத்து நிஜ பிளாக்மெயிலர் ஆகியிருக்கிறார் திருமாவளவன்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியினர், ‘’இப்போதுவரை அதிமுகவோடு
இருக்கிறது பாஜக. அந்த அதிமுகவின் தயவில் முதல்வரானால், திருமாவுக்கு அது ஒவ்வாமையாக
இருக்காது; உறுத்தலாகவும் இருக்காது. ஆர்.எஸ்.எஸ். பிள்ளை என தான் விமர்சித்த கட்சியிடம்
துணை முதல்வர் பதவி கேட்டு நிற்பது திருமாவுக்குக் கூச்சமாகவும் இருக்காது. இவ்வளவு
நாட்களாகத் திருமா தரித்த ‘பாஜக எதிர்ப்பு’ கோட்பாட்டு வேடமெல்லாம் இந்த கணத்தில் மொத்தமாக
உடைந்துகொண்டு இருக்கிறது. திருமா எப்போதும் ஒரு கேவலமான அரசியல்வாதி’’ என்கிறார்கள்.
தலித் மக்கள் ஆதரவு தனக்கு மட்டுமே இருக்கிறது என்ற மாயை இப்போது
உடைந்துபோயிருக்கிறது. திருமா மீது நம்பிக்கை இல்லாத காரணத்தாலே இந்த தேர்தலில் தலித்
மக்கள் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். திருமாவுக்கு சுயமாக ஒரு முடிவு எடுக்க
தைரியம் இல்லாமல் அறிவாலயத்தில் போய் கெஞ்சிக் கொண்டு இருக்கிறார். திமுக அதிமுக கூட்டணி
ஆட்சி அமையட்டும் என்பதற்கும் ஆசைப்படுகிறார் திருமா.
இதுகுறித்து தவெகவினர், ‘’விசிக முடிவு எடுப்பதற்கு முன்பாக இரண்டு
முறை ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். இவருக்கு தலித் மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை
இருக்குமானால் அந்த மக்கள் பயனடையக்கூடிய துறையின் அமைச்சர் பதவியை கேட்கலாம். அதை
விட்டுவிட்டு திமுகவின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்தால்
தான் ஆதரவு என்று கண்டிஷன் வைத்தாரா?
திருமாவளவன் அவர்களுக்கு இந்த முறை தலித் வாக்குகள் செல்லவில்லை.
அந்த ஓட்டுக்கள் விஜய்க்கு சென்றது. இந்த முறை தலித்துகள் தான் தேர்தல் வெற்றியை தீர்மானித்தார்கள்
என்கிற உண்மையும் மாற்ற முடியாது. ஆகவே பட்டியல் சமூகத்தை சேர்தவருக்கு துணை முதல்வர்
தாராளமாக கொடுக்கலாம். ஆனால் அது விஜய்யோடு நிற்கும் தவெகவினருக்குத்தான் தான் செல்ல
வேண்டும்…’’ என்கிறார்கள்.
அம்பலப்பட்டு நிற்கிறார் திருமா.
