Share via:
எந்த நேரமும் அதிமுகவுக்கு ஸ்டாலின் வழங்கலாம் என்று சொல்லப்படும்
நிலையில், முதல் வாய்ப்பு விஜய்க்கு வழங்கப்படும் என்றும் அவர் திமுக ஆதரவை ஏற்கவில்லை
என்றால் வேறு வழியின்றி எடப்பாடி பழனிசாமிக்கு வழங்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத்
தெரிகிறது.
இப்போதே அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது மக்களிடம் பெரும் அதிருப்தி
ஏற்படும். அதை தமிழக வெற்றி கழகம் தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்துவார்கள்! அனுதாபம்
கிடைக்கும். எனவே, முதல் வாய்ப்பு தமிழக வெற்றி கழகத்திற்கு வழங்க ஸ்டாலின் முன்வருகிறார்.
அதாவது நிபந்தனையுடன் ஆதரவளிக்கப்படும்.
அப்போது தங்கள் கூட்டணியில்
இருக்கும் விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், ஐயுஎம்எல் கட்சிகளுக்கு முக்கிய அமைச்சர்
பதவி கேட்கப்படும். இதன் மூலம் மக்கள் மத்தியில் திமுகவிற்கு ஆதரவு வரும். தன்னை எதிர்த்தவருக்கு
கூட ஆதரவு தருகிறார் என்று பேசப்படும்.
இந்த விஷயத்தில் விஜய் ஒரு வேளை திமுகவின் ஆதரவை ஏற்கவில்லை என்றால்,
விஜய் மீது கோபம் கொள்வார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் எடப்பாடிக்கு ஆதரவு தரலாம் என்று
முடிவு செய்திருக்கிறாராம்.
இன்று கம்யூனிஸ்ட்கள் ஆதரவு அறிவிப்பை அடுத்து ஸ்டாலின் ஆட்டம்
ஆரம்பமாகும்.
