Share via:
விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் அரசு பதவிக்கு நியமனம்
செய்யப்பட்டதற்கு தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ராஜ குருவாக இருந்தால் பெர்சனலா வெச்சிக்கோங்க, அரசு பதவி எதற்கு என்று கேட்டதற்கு
அதுகுறித்து யோசிக்கிறேன் என்று விஜய் பதில் சொலியிருக்கிறார்.
கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைக் கட்சியினர், ‘’அரசுச் செலவில் அதிகாரியாக
இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே
உதவும். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல! இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார்
என்பதும் ஏற்புடையதல்ல…’’ என்று கண்டித்துள்ளனர்.
அரசு பதவி வழங்கப்பட்டிருக்கும் விஜயின் ஜோதிடர் ரிக்கி ராதன்
பண்டிட் வெற்றிவேல் ஜெயலலிதாவின் ஜோதிடராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்
2008-ஆம் ஆண்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சசிகலா குடும்பத்தினர் மிரட்டுவதாக புகார்
கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜோதிடர் நியமனம் புதிய தலைமுறை நிறுவனத்தின் ஆசிரியர்,
‘’தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையினரிடமிருந்த (DIPR), ‘புதிய தலைமுறை’க்கு நேற்று
தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது; என் கவனத்துக்கு தாமதமாகத்தான் வந்தது. “ஜோதிடரும்
தவெக செய்தித்தொடர்பாளருமான திரு. ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் தமிழக அரசின் சிறப்பு
அலுவலராக நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்று ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில்
செய்தி வெளியான வேகத்தில், “ஜோதிடர் என்று குறிப்பிட வேண்டாமே!” என்று ‘அன்பு வேண்டுகோள்’ விடுக்கப்பட்டதாக
தெரிகிறது.
சென்ற அரசை சீரழித்ததில், அதிகாரிகளுக்கு மிக முக்கியமான பங்கு
உண்டு என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஓர் அரசு ஊழியரின் கடமை என்ன, அந்தப்
பொறுப்புக்கான மிடுக்கு என்ன எனும் எல்லா வரையறைகளையும் கடந்து, கட்சிக்காரர்களையும்
தாண்டி அரசியல் சாயத்துடன் செயல்பட்ட அரசு இயந்திரத்தின் மீதான கோபத்தையும் சேர்த்துதான்
மக்கள் 2026 தேர்தலில் காட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தல் முடிவும் அதிகாரத்தில்
இருந்த அரசியலர்கள் மீது மட்டுமல்ல; அரசு அதிகாரிகள் மீதான சமூகத்தின் எண்ணத்தையும்
சேர்த்தே பிரதிபலிக்கிறது. மக்கள் தீர்ப்பை அரசியல் தலைவர்கள் பரிசீலிக்கிறார்கள்;
நீங்களும் பரிசீலிக்க வேண்டும்.
ஆட்சியின் நல்ல விஷயங்களை ஊடகங்கள் கவனத்துக்கு கொண்டுசெல்வதும்,
அரசுக்கும் ஊடகங்களுக்கும் பாலமாக செயல்படுவதும்தான் உங்களுடைய பணி. அரசுக்கு சங்கடம்
தரும் எந்தச் செய்திகளும் ஊடகங்களில் வெளிவராமல் பார்த்துக்கொள்வதும், ஊடகங்களை எந்தெந்த
வகைகளில் எல்லாம் ‘நிர்வகிக்கலாம்’ என்று பராமரிப்பதும் அல்ல. சென்னை பல்கலைக்கழக
மாணவி விவகாரம் தொடங்கி இளைஞர் அஜித் குமார் அடித்தே பிணமாக்கப்பட்ட விவகாரம் வரையிலான
செய்திகளைத் தடுக்க கடந்த காலத்தில் ஊடகங்களுக்கு நீங்கள் கொடுத்த அழுத்தம் என்றைக்கோ
ஒரு நாள் முழுக் கதையும் வெளியே வந்துதான் தீரும். நிச்சயமாக நேரம் வாய்க்கையில், ஒவ்வொரு
பெயருடன் நான் எழுதுவேன்..’’ என்று கூறியிருக்கிறார்.
அதேபோல் அரசியல் விமர்சகர்கள், ‘’விஜய்யின் வீழ்ச்சிக்கு இரண்டு
பேர் காரணமாக இருப்பார்கள். ஒன்று: ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்.
இவரது கொள்கையே சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல ஒருவனின் ஆசையை தூண்டு அவன் உனக்கு
அடிமை ஆவான் என்பது தான். இவர் சசிகலா உட்பட அனைவருக்கும் “நீங்கள் இந்த நிலத்தை
ஆள்வீர்கள்” என எழுதி கொடுத்துள்ளார்.இவருக்கு அரசு பதவி கொடுத்துள்ளார் விஜய்.
இதை பார்த்து எல்லோரும் சிரிக்கிறார்கள். இரண்டாவது திருட்டு லாட்டரி குடும்பமான மார்ட்டின்
குடும்பம். ஆரம்பமே ஊழலுடன் ஆரம்பிக்கிறது. இருவரும் விஜய்க்கு முடிவுரை எழுதுவார்கள்…’’
என்கிறார்கள்.
விஜய் சுதாரித்துக்கொள்வாரா..?