News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு, போதை, ஊழல் போன்றவை தலைவிரித்து ஆடியதற்கு ஆட்சிப்பொறுப்பில் இருந்த அதிகாரிகளே முக்கிய காரணம் என்று கூறப்பட்டு வந்தது. இதனை சீர்செய்வதற்கு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு செய்திருக்கிறது.

அதன்ப்டி நிதித்துறை செயலாளராக இருந்த உதயச்சந்திரன் மாற்றப்பட்டு சித்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த அமுதா மாற்றப்பட்டு முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் மேலாண் இயக்குனராக நந்தகுமாரும் சுற்றுலா வளர்ச்சி, கலாச்சாரத்துறை செயலாளராக ஸ்வர்ணாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் எம்.ஏ.சித்திக் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நிதித் துறை செயலாளர் என்ற வகையில் அரசின் முழு பணத்தையும் கட்டுப்படுத்தும் முக்கிய அதிகாரி. பட்ஜெட் தயாரிப்பு, நிதி ஒதுக்கீடு, வரவு, செலவு எல்லாம் இவரது கையில். அரசு எந்த திட்டத்தை எவ்வளவு வேகத்தில் செயல்படுத்த முடியும் என்பதை தீர்மானிக்கும் இடம். அரசின் திட்டங்களுக்கு உயிர் கொடுக்கும் நிதி பரிமாற்றம் இவரிடமிருந்து தான் ஆரம்பமாகும். எனவே, விஜய் போடும் திட்டங்களை மக்களுக்குச் சென்று சேர்வதற்கு இவரே பணம் தர வேண்டும். அதற்கு தகுதியான நபர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்தது வருவாய் நிர்வாக ஆணையர் முருகானந்தம். அரசுக்கு வரும் வரி மூலம் வரும் வருவாயை நிர்வகிக்க்கும் பொறுப்பு முக்கியமானது. இவர்தான் மாவட்ட அளவில் வருமானத்தை மானிட்டர் செய்து மாநிலத்துக்கு நிதி வருவாய் உயர்த்த வேண்டும். கலெக்டர்களை டீல் செய்து அரசுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு பெற வேண்டியது இவர் கையில் உள்ளது.

அடுத்ததாக நந்தகுமார் டாஸ்மாக் முழு கண்ட்ரோல் இவரிடம் இருக்கும். இதுதான் அரசுக்கு பணம் கொட்டும் துறை. எனவே, மது கொள்முதல், டிஸ்ட்ரிப்யூஷன் மூலம் அரசுக்கு நேரடியாக வருமானத்தை வழங்க முடியும்.

இவர்களில் நிதித்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர் சித்திக் ஐஏஎஸ். மத்திய அரசிலும் பணியாற்றி உள்ளார். 95 ம் ஆண்டு UPSC தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்றவர். முடிவுகளை உடனுக்குடன் எடுப்பதில் பெயர் பெற்றவர். இவர் கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழக அரசின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகிறார். குறிப்பாக தனது பணிக்காலத்தின் பெரும் பகுதியை அவர் நிதித்துறையிலே கழித்துள்ளார்.

1999 முதல் 2002 வரையிலான காலகட்டத்தில் நிதித்துறையின் துணைச் செயலாளராகப் பணியாற்றியபோதே, மாநில பட்ஜெட் தயாரிப்பில் முக்கியப் பங்காற்றினார். பின்னர் 2017-2019 காலகட்டத்தில் நிதித்துறையின் (செலவினம்) முதன்மைச் செயலாளராகப் பணியாற்றினார். தமிழக அரசின் நிதி நிலைமை, கடன் மேலாண்மை மற்றும் வருவாய் ஆதாரங்கள் குறித்து ஆழமான புரிதலைக் கொண்ட அதிகாரிகளில் இவரும் ஒருவர். சென்னை மெட்ரோவின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்.

 

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளை விரைவுபடுத்துவதிலும், நிதி ஆதாரங்களைத் திரட்டுவதிலும் இவரது பங்கு அளப்பரியது. குறிப்பாக, மெட்ரோ பணிகளுக்காக உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெறுவதில் இவரது நிதியியல் அனுபவம் பெரும் உதவியாக இருந்தது.

இதற்கு முன்பு வணிகவரித்துறை ஆணையராகவும் பணியாற்றிய இவர், ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிந்தைய வருவாய் நிர்வாகத்தைச் சீரமைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.. நிர்வாகத்திறன், நேர்மை மற்றும் பொருளாதார நுணுக்கங்களைத் தெரிந்த ஒரு அதிகாரி நிதித்துறைக்குத் தலைமை ஏற்பது, தமிழக அரசுக்கு நிர்வாக ரீதியாகப் பெரிய பலமாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link