Share via:
புஷ்பா படத்தில் ஒரு முக்கியமான காட்சி வரும். அரசியலில் மாற்றம்
செய்யவேண்டும் என்பதற்காக புஷ்பா அரசியல்வாதிக்கு புது ஷோபா அனுப்பிவைப்பார். அது சாதாரண
ஷோபா இல்லை, காஸ்ட்லி என்றதும், அந்த ஷோபாவின் குஷன் அகற்றப்படும். அதற்குள் கட்டுக்கட்டாக
பணம் கொட்டிக் கிடக்கும்.
அந்த வகையில் விஜய் வருகிறார் என்றதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி
அலுவலகத்திற்கு ஒரு ஷோபா வந்தது. அதேபோல் சிவி சண்முகம் அலுவலகத்திற்கு வருகிறார் என்றதும்
அங்கேயும் ஒரு ஷோபா வந்து சேர்ந்தது.
இதை குறிப்பிட்டு இன்று சட்டப்பேரவையில் உதயநிதி பேசினார். தமிழக
வெற்றிக் கழக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் மீது எதிர்க்கட்சித்
தலைவர் உதயநிதி, ‘’தனது வெற்றி மீது நம்பிக்கை இல்லாமல் விஜய் இரு இடங்களில் போட்டியிட்டார்.
ஆளுங்கட்சிக்கு 1.72 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர்; தவெகிவுக்கு
எதிராக 3.21 கோடி பேர் வாக்களித்தனர். இதன் அர்த்தம் என்னவென்றால் தமிழக வெற்றிக் கழகத்தை
65% வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்-
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க பெரும்பான்மை மக்கள் வாக்களிக்கவில்லை.
புது ஷோபா முன்னால போகுது, புது முதல்வர் பின்னால போகிறார். நம்பிக்கை வாக்கெடுக்குப்
முன்பே கட்சியை உடைத்து அந்த கும்பலின் வீட்டுக்கே சென்று ஆதரவு அளிக்கும் புஷ்பா பாணி
ஆட்சி நடக்கிறது.
change change சொன்னிங்களே இதுக்கு பின் என்ன exchange இருக்கு?
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஆட்சியா இல்லாமல் ரியல் ஆட்சியா நடத்துங்க
இதுதான் மக்களோட கோரிக்கை. இது புதிய ஆட்சி இல்லை. இது புஷ்பா பட பாணியிலான ஆட்சி’’
என்றதுடன் நில்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பிலிருந்து, திமுக வெளிநடப்பு செய்துள்ளது.
குதிரை பேரம் நடந்திருக்கிறது. அமமுக தலைவரிடம் இருந்து எம்.எல்.ஏ.வை
பறித்துவிட்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த விஜய், ‘குதிரை பேரம் நடக்கவில்லை, குதிரை வேகம்’
என்று வழக்கம்போல் பஞ்ச் டயலாக்கில் பதில் சொல்லியிருக்கிறார். புது ஷோபாவுக்கும் புஷ்பா
பட அரசியலுக்கும் பதில் சொல்லாமல் விஜய் எஸ்கேப் ஆகியிருக்கிறார்.
இனியாவது பதில் வருமா பாஸ்?